அகில தனஞ்செயவின் உதவியோடு மூன்று விக்கெட்டுகளால் வெற்றீட்டிய மேற்கிந்திய தீவுகள் அணி!

அகில தனஞ்செயவின் உதவியோடு  மூன்று விக்கெட்டுகளால் வெற்றீட்டிய மேற்கிந்திய தீவுகள் அணி!

அன்டிகுவாவில் இன்று நடைப்பெற்ற இலங்கை- மேற்கிந்திய தீவுகள் அணிகளுகிடையிலான தொடரின் மூன்றாவதும் இறுதியுமான T20 போட்டியில்  மேற்கிந்திய தீவுகள் அணி இலகுவாக மூன்று விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது.

அத்துடன் தொடரை 2- 1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

போட்டியின் ஆரம்பத்தில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அணித்தலைவர் மைக் முன்பாக நின்று முதலில் துடுப்பெடுத்தாட போவதாக அறிவித்தார்.

இரண்டாவது போட்டியில் விளையாடிய  அதே பார்மூலாவை  பயன்படுத்தினார்கள் ஆனால் இதற்கு ஏற்ப மேற்கிந்திய தீவுகள் அணி சில மாற்றங்களை செய்தது.

பவர் பிலே  ஓவர்களை மேற்கிந்திய தீவுகள் அணியின் சுழல் பந்து வீச்சாளர்கள் வீசினார்கள்.

“அட சுழல் பந்து வீச்சாளர்கள் தானே”  என நினைத்த  இலங்கை அணி  வழமை போல அதிரடி ஆட்டத்தை ஆரம்பித்தார்கள்

ஆனால் அன்றைக்கு நடந்ததை போல் இன்று நடக்கவில்லை இலங்கை ஆரம்ப விக்கெட்டுகள் மளமளவென்று விழுந்தது.

6 வது ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 27 ஓட்டங்களை பெற்று இருந்தது. இதில் குணதிலக்க 9 ஓட்டங்கள் , நிரோஷன் திக்வெல்ல 4 ஓட்டங்கள் , பத்தும் நிசாங்க 5 ஓட்டங்கள்

அதன்பிறகு ஜோடி சேர்ந்த சந்திமல் மற்றும் மத்தியூஸ் அருமை ஆடுவார்கள் என நினைத்தால் மத்தியூஸ் வழமை போல குறைந்த ஓட்டமான 11 ஓட்டங்களை அவர் பெற்ற போது ஆட்டமிழந்தார்.

அந்நேரம் இலங்கை அணி 9.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 46 ஓட்டங்களை பெற்று இக்கட்டான நிலையில் இருந்தது

அதன் பிறகு ஜோடி சேர்ந்த சந்திமால் மற்றும அஷேன் பண்டார இருவரும் இணைந்து தட்டு தடுமாறி 85 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்று அணியின் ஓட்ட எண்ணிக்கையை 20 ஓவர்கள் முடிவில் 131 ஓட்டங்கள் வரை கொண்டு சென்றனர்.

இதில் சந்திமால் ஆட்டமிழக்காமல் 54 ஓட்டங்களையும் பண்டார 44 ஓட்டங்களையும் பெற்றனர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி அதிரடி ஆட்டத்தை ஆரம்பித்தனர். அகில தனஞ்செயவின் பந்துக்கு அடி இடியென கொடுத்தார்கள்.

அள்ளி கொடுப்பதில் வல்லவர் அவர் தனத 4 ஓவர்களில் மொத்தமாக 5 சிக்ஸர் 4 பவுண்டரிகளை விலாச கொடுத்தார் . அவர் மொத்தமாக கொடுத்த ஓட்டம் 53

ஹசரங்க வழமை போல கஷ்டப்பட்டு ஒரு பக்கம் விக்கெட்டுகளை கழற்றிய போதும் தனஞ்செய தனது அனுபவத்தை வைத்து பெரிதாக ஒன்றுமே செய்யவில்லை.

எது எப்படியோ மேற்கிந்திய தீவுகள் அணி 19 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 134 ஓட்டங்களை பெற்று வெற்றீட்டியது.

பந்து வீச்சில் ஹசரங்க 2 விக்கெட்டுகளையும் சந்தகேன் 3 விக்கெட்டுகளையும் துஸ்மித சமிர 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்கள்

போட்டியில் பந்து வீச்சிலும் அதிரடி ஆட்டத்திலும் கலக்கிய பெபியன் அலன் சிறப்பாட்டக்காராக தெரிவானார்.

அவர் 6 பந்துகளில் 3 சிக்ஸர்கள் அடங்களாக 21 ஓட்டங்களை பெற்றார். அத்துடன் பந்து வீச்சில் 4 ஓவர்கள் வீசி 13 ஓட்டங்களை கொடுத்து தனுஷ்கவின் விக்கெட்டை கைப்பற்றினார்

இனி என்ன 10 ஆம் திகதி ஆரம்பமாகும் ஒரு நாள் தொடரில் சந்திப்போம்.

administrator

Related Articles