அசாத் சாலியிடம் தொடர்ந்தும் விசாரணை, அவரின் வாகனத்தில் இருந்து மீட்கப்பட்ட பொருள் பற்றிய அதிர்ச்சி தகவல்

அசாத் சாலியிடம் தொடர்ந்தும் விசாரணை, அவரின் வாகனத்தில் இருந்து மீட்கப்பட்ட பொருள் பற்றிய அதிர்ச்சி தகவல்

குற்றப் புலனாய்வு திணைகள அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைத்து விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.

பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண இதனை தெரிவித்துள்ளார்.

கொள்ளுப்பிட்டியில் நேற்று தனது காரில் பயணித்துக் கொண்டிருந்த போது அசாத் சாலி கைது செய்யப்பட்டார்.

இதனையடுத்து அவரின் வாகனத்தை சோதனைக்கு உட்படுத்திய போது வெளிநாடு ஒன்றில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி ஒன்றும் தோட்டாக்களும் மீட்கப்பட்டுள்ளன.

இது தொடர்பிலும் விசாரணை நடத்தப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஆளுநர் அசாத் சாலி குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் நேற்று மாலை கொள்ளுப்பிட்டியில் வைத்து கைது செய்யப்பட்டார்.

கடந்த 10 ஆம் திகதி வெளியிட்டதாகக் கூறப்படும் கருத்து ஊடாக தண்டனை சட்டக்கோவை, பயங்கரவாத தடைச்சட்டம், அரசியல் மற்றும் சிவில் உரிமைகள் தொடர்பான சட்டங்களின் கீழ் அவர் குற்றமிழைத்துள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு சட்டமா அதிபர் நேற்று அறிவித்திருந்தமை குறிப்பிடதக்கது.

administrator

Related Articles