அடுத்த ஆண்டில் இலங்கை அணி விளையாடவுள்ள போட்டிகள்

அடுத்த ஆண்டில் இலங்கை அணி விளையாடவுள்ள போட்டிகள்

எதிர்வரும் 2021 ஆம் ஆண்டில் இலங்கையணி பங்கேற்கவுள்ள சர்வதேக போட்டிகள் தொடர்பான அட்டவணையை ஸ்ரீ லங்கா கிரிக்கெட் வெளியிட்டுள்ளது.

அதற்படி இலங்கை அணி 15 ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலும் 12 T20 போட்டிகளிலும் விளையாடவுள்ளது.

அத்துடன் 15 ஆவது ஆசியக் கிண்ண போட்டிகளிலும் இலங்கை அணி பங்கேற்கவுள்ளது.

மேலும், பங்களாதேஸ், அயர்லாந்து, இந்தியா, தென்னாபிரிக்கா, ஸ்கொட்லாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட அணிகள் இலங்கைக்கு வருகைதந்து போட்டிகளில் பங்கேற்கவுள்ளன.

இந்த அணிகளுடன் 8 டெஸ்ட் போட்டிகளிலும் இலங்கையணி விளையாடவுள்ளது.

டெஸ்ட் போட்டிகளில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவதை நோக்காக கொண்டே அயர்லாந்து அணியுடன் எதிர்வரும் மே மாதத்தில் டெஸ்ட் போட்டியில் இலங்கையணி விளையாடவுள்ளது.

இது இரு நாடுகளுக்கும் இடையில் நடைபெறும் முதலாவது டெஸ்ட் போட்டியாகவும் இது அமையவுள்ளது.

மேற்குறிப்பிட்ட தொடர்களில் 6 அணிகளுடன் இடம்பெறும் டெஸ்ட் போட்டிகள் ஐ.சி.சி சாம்பியன் சிப் டெஸ்ட் தொடருடன் சம்பந்தப்பட்ட போட்டிகளாகும்.

இதேவேளை இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையில் சென்சூரியனில் இடம்பெற்று வரும் முதல் டெஸ்டில் தென்னாபிரிக்கா அணி 72 ஓட்டங்களால் முன்னிலை பெற்றுள்ளது.

முதல் இனிங்சில் துடுப்பெடுத்தாடும் தென்னாபிரிக்கா சற்று முன்னர் வரை 104.2 ஓவர்களை எதிர்கொண்டு 5 விக்கெட் இழப்புக்கு 474 ஓட்டங்களை பெற்றுள்ளது.

துடுப்பாட்டத்தில் பெப் டூ பிளசிஸ் ஆட்டமிழக்காமல் சற்று முன்னர் வரை 134 ஓட்டங்களை பெற்றுள்ளார்.

இலங்கையின் பந்து வீச்சில் தசுன் ச்சானக்க 2 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளார்.

இலங்கையணி முதல் இனிங்சில் 396 ஓட்டங்களை பெற்றமை குறிப்பிடதககது.

administrator

Related Articles