ரபடாவின் பந்து வீச்சு காரணமாக சூப்பர் ஓவரில் வென்ற டெல்லி!!!

ரபடாவின் பந்து வீச்சு காரணமாக சூப்பர் ஓவரில் வென்ற டெல்லி!!!

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி கடைசி ஓவரில் ஒரு ரன்னை அடிக்க முடியாமல் இரண்டு விக்கெட்டுகளை இழந்தனால் சூப்பர் ஓவருக்கு இன்றைய போட்டி சென்றது.

அம்பாயர்  ஒரு ரன் ஷார்ட் என்று தவறாக அறிவித்தனால் இந்த நிலை தோன்றியதா என்ற கேள்வி நமக்கு ஏற்பட்டது.

போங்கடா ஒரு ரன்னை அடிக்க முடியாத நீங்க சூப்பர் ஓவர் வரைக்கும் ஆட்டத்தை கொண்டு சென்றுட்டீங்களே என ரசிகர்கள் பஞ்சாப் அணி மீது கடுப்பாகிட்டாங்க

சூப்பர் ஓவரில் ரபடா வீசிய பந்துக்கு அடிக்க முடியாமல் இரண்டு விக்கெட்டுகளை இழந்து மொத்தம் 2 ஓட்டங்களை மட்டுமே பஞ்சாப் அணி பெற்றது.

ஆரம்பத்தில் ராகுல் முதல் பந்தில் இரண்டு ஓட்டங்களை பெற்றார். ஆனால் அடுத்த பந்தில் நேராக பட்டேல் கையில் போலை கொடுத்து ஆட்டமிழந்தார்.

அதற்கு பிறகு பூரன் விக்கெட்டை திறந்து கொடுத்து டபார் என்று ஆட்டமிழந்தார்.

சூப்பர் ஓவர் ரூல்  பிரகாரம் மொத்தம் மூன்று பேருக்கு மட்டுமே பேட் செய்ய முடியும். அதன் படி இரண்டு பேர் ஆட்டமிழக்க ஓவரும் ஓவராகிட்டு விட்டது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய டில்லி அணி சார்பாக துடுப்பெடுத்தாடிய பண்ட் மற்று ஷ்ரேயஸ் இலகுவாக ஆடலாம் என்று வந்தனர்.

மொகமட் சமி முதல் பந்தை ஒழுங்காக வீசினார்.இரண்டாவது பந்தை அப்படி வைட்டுக்கு வீசினார. மூன்றாவது பந்தில் பண்ட்  லோங்கிற்கு அடித்து இரண்டு ஓட்டங்களை பெற்று டீமை வெற்றிக்கு கொண்டு சென்றார்.

ஆரம்பத்திவ் தோல்வியை நோக்கி சென்ற டில்லி கெபிட்டல் அணி அதிஷ்டத்தோடு வெற்றி பெற்றுவிட்டது.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் சார்பாக மயாங் அகார்வல் எடுத்த 89 ஓட்டங்களும் வீனாகி போயிட்டு.

இதில் முக்கியமான விடயத்தை மறந்திட்டோம். நம்ம சுழல்பந்து வீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் இன்ஜரி ஆகிட்டார்

அவரு ஒரு ஒவர்  வீசி இரண்டு விக்கெட்டுகளை எடுத்தாரு பின்னர் அந்த ஓவரில் கடைசி பந்தை பிடிக்க போய் தோல்பட்டை விலகி இஞ்சரி ஆகிட்டார். இனி அவர் எப்ப விளையாடுவாரு என்பது நமக்கு தெரியாது.

ஸ்கோர் விபரம்

டில்லி கெபிட்டல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில்  8 விக்கெட்டுகளை இழந்து 157 ஓட்டங்களை பெற்றது.

இதில் அதிரடி ஆட்டம் ஆடின ஸ்டோனிஸ் 21 பந்துகளில் மூன்று சிக்ஸர்கள் 7 பவுண்டரிகள் அடங்கலாக 53 ஓட்டங்களை பெற்றார்.

அவர் மட்டும் அடிக்காமல் இருந்தால் அணி அம்போ தான்.

பந்துவீச்சில்  சமி 4 ஓவர்களை வீசி 24 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை எடுத்தார். இதே அணியில் விளையாடிய ஜோர்டன் 4 ஓவர்களுக்கு 56 ஓட்டங்களை கொடுத்து ஒரு விக்கெட்கையும் எடுக்க இல்ல ஆனால்  இறுதி ஓவரில் 30 ஓட்டங்களை அள்ளி கொடுத்தார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் அணி  4 விக்கெட்டுகளையும் மளமளவென இழந்தது  அந்த நேரம் 34 ஓட்டங்களை மட்டுமே பெற்று இருந்தது.

ஆனாலும் ஆரம்ப பேட்ஸ்மனான மயாங் பொறுமையாக ஆடி 89 ஓட்டங்களை பெற்றது மட்டுமல்ல  வெற்றிக்கு ஒரு ரன் மட்டுமே தேவை என்ற போது அவுட்டானார்.

இது பிறகு அந்த ஒரு ஓட்டம் எடுக்கும் பொறுப்பு  ஜோர்டனிடம் வழங்கப்பட்டது அவர் ஸ்ரோனிஸ் பந்துக்கு அடிக்க போய் ரபடாவின் கையில் பந்தை கொடுத்து பெவிலயன் நோக்கி தலையை ஆட்டி கொண்டு நடந்தார். அந்நேரம் பஞ்சாப் அணி 8 விக்கெட்டுகளை 157 ஓட்டங்களை பெற்றது .

போட்டி சமனாக முடிந்ததால் சூப்பர் ஓவருக்கு சென்றது.இனி மீண்டும் மேலே இருந்து வாசிங்க.

administrator

Related Articles