அத்தியாவசிமற்ற பொருட்களை கடைக்குள் விற்பனை செய்வதை தடை செய்த மெனிட்டோபா !

அத்தியாவசிமற்ற பொருட்களை கடைக்குள் விற்பனை செய்வதை தடை செய்த மெனிட்டோபா !

கனடா மாகணத்தில் கொரோனா வைரஸ் குறைந்தளவில் பரவி இருந்த மெனிட்டோபா மாகணத்தில் தற்போதைய சூழ்நிலையில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாகி விட்டது.

இதனையடுத்து மாகண அரசு பல்வேறு புதிய நடைமுறைகளை அமுல்படுத்தியுள்ளது.நாளை வெள்ளிக்கிழமை முதல் இந்த நடைமுறை அமுலுக்கு வருகிறது.

குறிப்பாக வர்த்தக நிலையங்களில் எதிர்வரும் சனிக்கிழமை முதல் அத்தியாவசியமற்ற பொருட்களை விற்பனைக்கான செல்புகளில் காட்சிக்கு வைக்க கூடாது என மாகண அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த நடைமுறை டிசம்பர் 11 ஆம் திகதி வரை அமுலில் இருக்கும்.

அதேபோன்று தனியான ஒன்று கூடல்களுக்கும் கட்டுபாடு விதிக்கப்பட்டுள்ளது. வீட்டில் இருப்போரை தவிர மேலும் ஐந்து பேருக்கு மட்டுமே வீட்டு ஒன்று கூடல்களில் கலந்து கொள்ள முடியும்.

இந்த நடைமுறைகளை மீறுவோருக்கு எதிராக $5000 டொலர் அபராதமாக விதிக்கப்படும்

மெனிட்டோபாவில் கொரோனா வைரஸ் காரணமாக இதுவரை 190 பேர் உயிரழந்துள்ளனர்

administrator

Related Articles