வடக்கு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்த 19 இந்திய மீனவர்கள் பேர் கைது!

வடக்கு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்த  19 இந்திய மீனவர்கள் பேர் கைது!

அண்மைய நாட்களாக இலங்கையின் வடக்கு பகுதி கடற்கரைக்கு நெருக்கமாக அத்துமீறி இலங்கை தமிழ் மீனவர்களின் மீன் வளத்தை அள்ளிவந்த இந்திய மீனவர்களில் 19 பேரை இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

நெடுந்தீவுக் கடற்பரப்பில் தொடர்ந்தும் அத்துமீறி கரைக்கு மிக நெருக்கமாக வந்து மீன்வளத்தை வாரி அள்ளிச் சென்ற இந்திய மீனவர்களின் மோசமான நடவடிக்கையால் இனி வரும் நாட்களில் இந்திய மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவோம் என்று வடமராட்சி மீனவர்கள் எச்சரிக்கை தீர்மானம் எடுத்திருந்திருந்தனர்.

இந்நிலையில் இன்று நெடுந்தீவுக் கடற்பரப்பில் அத்துமீறிய மீன்பிடிப் படகுகளை சுற்றிவளைத்த கடற்படையினர் அவற்றைக் கைப்பற்றியுள்ளனர். அதில் இருந்த 19 மீனவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை தற்போதைய கொரோனா நிலைமை காரணமாக அத்துமீறும் மீனவர்கள் அவர்களின் நாடுகளுக்கு திருப்பி அனுப்பப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

administrator

Related Articles