அநுராதபுரத்தில் 6 அடி உயரமான ஆண் யானை உயிரிழப்பு

அநுராதபுரத்தில் 6 அடி உயரமான ஆண் யானை உயிரிழப்பு

அநுராதபுரம் கெக்கிராவ மொரகொட பகுதியில் யானை ஒன்று விவசாயிகளால் வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் அக்கபட்டாஸ் தொகையை உட்கொண்டு உயிரிழந்துள்ளது.

5 வயதான 6 அடி உயரமான ஆண் யானையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக எமது செய்தியாளர் கூறினார்.

சோளச் செய்கையை யானைகளிடம் இருந்து பாதுகாப்பதற்காக விவசாயிகளால் அக்கப்பட்டாஸ் தொகை வைக்கப்பட்டுள்ளது.

கடந்த 10 நாட்களாக குறித்த யானை தமது விவசாய நிலங்களை சேதப்படுத்தி வந்தாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

குறித்த பகுதியில் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் சுமார் ஆறு யானைகள் உயிரிழந்துள்ளதாக பிரதேச வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

administrator

Related Articles