அபோட்ஸிலி தோட்டத் தொழிலாளி கூரையிலிருந்து வீழ்ந்து மரணம்

அபோட்ஸிலி தோட்டத் தொழிலாளி கூரையிலிருந்து வீழ்ந்து மரணம்


ஹட்டன் அபோட்ஸிலி தோட்டத்தைச் சேர்ந்த தொழிலாளி ஒருவர் கூரையிலிருந்து கீழே வீழ்;ந்து உயிரிழந்துள்ளார்.

தோட்டத்தில் இன்றைய தினம் பணியாற்றிக் கொண்டிருந்த போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது

தேயிலை கொழுந்து நிறுக்கும் மடுவத்தின் கூரையை பழுதுபார்த்துக் கொண்டிருந்த போது மேலிருந்து கீழே வீழ்ந்து இவர் உயிரிந்துள்ளார்.

39 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கீழே வீழ்ந்த குறித்த நபர் டிக்கோயா கிளங்கள் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட போதிலும் தலையில் ஏற்பட்ட பலத்த காயம் காரணமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

administrator

Related Articles