அப்பாவுக்கு விபத்து… சாப்பாடு கஷ்டம்… கண்கலங்க வைத்த சீரியல் நடிகை நிஜ ஃபிளாஷ்பேக்!

அப்பாவுக்கு விபத்து… சாப்பாடு கஷ்டம்… கண்கலங்க வைத்த சீரியல் நடிகை நிஜ ஃபிளாஷ்பேக்!

சன்டியிவில் கடந்த 2018-ம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் சீரியல் ரோஜா. சுப்பு சூரியன் பிரியங்கா நல்கரி ஆகியோர் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்து வரும் இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

அதிலும் நாயகன் அர்ஜூன் – ரோஜா இடையேயான ரொமான்ஸ் காட்சிகளுக்காகவே தனி ரசிகர்கள் பட்டாளங்கள் உள்ளன. இந்த சீரியலில் முதன்மை கதாப்பாத்திரம் ரோஜாவாக நடித்து வரும் பிரியங்கா நல்கரி, கடந்த 2010- தெலுங்கில் வெளியான அந்தாரி பந்துவையா படத்தில் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.

அதனைத் தொடர்ந்து ‘நா சாமி ரங்கா’, ராமின் ‘ ஹைப்பர்’, ராணா டகுபதியின் ‘நேனே ராஜா நேனே மந்திரி’ என அடுத்தடுத்து சில படங்கிளில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்த அவர், தொடர்ந்து கடந்த 2019-ம் ஆண்டு தமிழில் ராகவா லாரன்ஸ் இயக்கிய காஞ்சனா 3 படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். திரையுலகை தொடர்ந்து சீரியல் படம் திரும்பிய பிரியங்கா, ஈ டிவியில் ஒளிபரப்பான ‘மேகமாலா’ மற்றும் ஜெமினி டிவியில் ஒளிபரப்பான ‘ஸ்ரவனா சமீராலு’ ஆகிய இரண்டு சீரியல்களிலும் நடித்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து கடந்த 2018-ம் ஆண்டு தமிழில் தொடங்கிய ரோஜா சீரியில் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார். தெலுங்கு தமிழ் என சீரியில் மற்றும் திரைப்படங்களில் நடித்திரந்தாலும், இவர் தற்போது நடித்து வரும் ரோஜா சீரியலே இவருக்கு அதிக ரசிகர்ளை கொடுத்தது என்று கூறலாம். இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய அவர், திரைத்துறைக்கு வருவதற்கு முன் தனது வாழ்க்கை நிலை குறித்து உருக்கமான தகவலை பகிர்ந்துள்ளார்.

இது தொடர்பாக பிரியங்கா கூறுகையில், என்னுடைய ஹேண்ட் பேக்கில் எப்போதும் பிஸ்கட் பாக்கெட் இருக்கும் யாரும் பசியுடன் இருப்பது எப்போதும் எனக்கு பிடிக்காது. சிறுவயதில் நான் பல நாட்கள் சாப்பிடாமல் இருக்கிறேன். எனக்கு நிறைய பிரச்சினைகள் இருந்தது. அப்பாவுக்கு விபத்து ஏற்பட்டு காலில் அடிபட்டு விட்டது. அம்மா ஒரு ஹவுஸ் வைஃப் எனக்கு மூன்று சகோதரிகள். வீட்டில் ஒரு நாள் சாப்பாடு இருக்கும் ஒரு நாள் இருக்காது. இதனால் நான் பலமுறை பசியுடன் இருந்திருக்கிறேன் என்று கூறியுளளார். இப்படி ஒரு நிலையில் இவரது தங்கையின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

administrator

Related Articles