அமெரிக்காவில் கொரோனா – 2 லட்சத்து 50 ஆயிரம் பேர் மரணம்! கார் விபத்தில் உயிரிழப்போரை விட பத்து மடங்கு அதிகமாம்

அமெரிக்காவில் கொரோனா – 2 லட்சத்து 50 ஆயிரம் பேர் மரணம்!  கார் விபத்தில் உயிரிழப்போரை விட பத்து மடங்கு அதிகமாம்

கொரோனா நோய் உலகம் முழுவதும் பரவி பல லட்ச உயிர்களை பலியெடுத்து விட்டது. இந்த செய்தி எழுதும் வேளையிலும் ஏன் நீங்கள் வாசிக்கும் போதும் எதோ ஒரு இடத்தில் மரணம் நிகழ்ந்து கொண்டே இருக்கும்.

ஆனால் வளர்ந்த நாடான அமெரிக்காவில் இந்த நோய் ஆட்டி படைத்தை யாரலும் மறுக்க முடியாது. தற்போதைய தரவுகளின் பிரகாரம் கொவிட் 19 காரணமாக இதுவரை அமெரிக்காவில் 2 லட்சத்து 50 ஆயிரம் பேர் உயிரழந்துள்ளனர் . இது அந்த நாட்டில் வருடாந்தம் கார் விபத்துக்களினால் உயிரழந்தோரை விட பத்து மடங்கு அதிகமாம்.

இந்த வருடம் இதுவரை கார் விபத்துக்களினால் உயிரழந்தோர் எண்ணிக்கை 24 ஆயிரம் என ஜோன் ஹோப்பிங்ஸ் பல்கலைகழக ஆய்வு தரவுகள் கூறுகின்றன.

அமெரிக்க பெருந்தெருக்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளின் தரவுகள் பிரகாரம் வருடாந்தம் கார் விபத்துக்களால் 24 , 166 பேர் உயிரழக்கின்றனர்

administrator

Related Articles