அமெரிக்கா, கனடா ஓபன் பெட்மிண்டன் போட்டிகள் இரத்து

அமெரிக்கா, கனடா ஓபன் பெட்மிண்டன் போட்டிகள் இரத்து

கொரோனா கட்டுப்பாடுகள் மற்றும் நடைமுறை சிக்கல்கள் காரணமாக அமெரிக்க ஓபன் மற்றும் கனடா ஓபன் ஆகிய இரண்டு பெட்மிண்டன் போட்டிகளும் இரத்து செய்யப்பட்டுள்ளன.

உலக பெட்மிண்டன் கூட்டமைப்பு இந்த முடிவை அறிவித்துள்ளது.

அமெரிக்க ஓபன் ஜூலை 6 ஆம் திகதி முதல் 11 ஆம் திகதி வரையிலும், கனடா ஓபன் ஜூன் 29 முதல் ஜூலை 4 ஆம் திகதி வரையிலும் நடத்த முடிவு செய்யப்பட்டு, போட்டி அட்டவணை வெளியிடப்பட்டது.

இந்த நிலையில் உலக பெட்மிண்டன் கூட்டமைப்பு தற்போதைய நிலையை கருத்திற்கொண்டு இந்த முடிவை எடுத்துள்ளது.

இதேபோல் ஒலிம்பிக் தகுதிப் போட்டியான ஆசிய சாம்பியன்சிப் போட்டிகளும் ஒத்திpவைக்கப்பட்டுள்ளதாக உலக பேட்மிண்டன் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த சாம்பியன்ஷிப் போட்டியானது, டோக்கியோ ஒலிம்பிக் தரவரிசைக்கானது.

ஆனால் ஒலிம்பிக் தகுதி காலத்திற்குள் சம்பியனசிப் போட்டியை நடத்த முடியாது என்பதால், புள்ளிகள் இனி சேர்க்கப்படாது.

மாற்று போட்டிகளும் சேர்க்கப்படாது என உலக பேட்மிண்டன் கூட்டமைப்பு கூறியுள்ளது.

administrator

Related Articles