அமெரிக்க கனடா எல்லை கட்டுப்பாடுகளை கொரோனா முடியும் வரை நீடிக்க ஆலோசனை!!

அமெரிக்க கனடா எல்லை  கட்டுப்பாடுகளை  கொரோனா முடியும் வரை நீடிக்க ஆலோசனை!!

கனடா – அமெரிக்கா எல்லைகளுக்கிடையான கட்டுப்பாடுகளை தளர்த்தும் எண்ணம் தற்போதைக்கு கிடையாது என கனேடிய பிரதமர் ஜஸ்டின் டூருடோ கூறுகிறார். இதன்படி அத்தியாவசியமற்ற பயணங்களை கட்டுப்படுத்தும் செயற்பாடுகள் கொவிட் 19 முடியும் வரை அமுலில் இருக்கும் . இந்த கட்டுப்பாடுகள் உலகின் ஏனைய பகுதிகளுக்கும் பொருந்தும்.

கொரோனா வைரஸ் எப்போது ஒரளவு கட்டுப்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டதாக உலகின் சகல பாகங்களிலும் இருந்து அறியும் வரை இந்த கட்டுப்பாடுகள் தொடர்ந்து இருக்கும் என பிரதமர் இன்று நடைப்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் தெளிவாக கூறியுள்ளார்.

தமது எல்லைகளை கட்டுப்பாட்டிற்கு கொண்டு வருவதற்கு கடந்த மார்ச் மாதம் அமெரிக்காவும் கனடாவும் இணங்கின.

அதனை தொடர்ந்து மாத மாதம் இந்த நடைமுறை தளர்த்தல் ஆராய்யப்பட்டது. ஆனாலும் தற்போதைய நிலையில் இது சாத்தியப்படாது என கூறப்படுகிறது.

administrator

Related Articles