அமெரிக்க பகிரங்க டெனிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் செம்பியன் டொமினிக் தீம்

அமெரிக்க பகிரங்க டெனிஸ்  ஆண்கள் ஒற்றையர் பிரிவின் செம்பியன் டொமினிக் தீம்

கடந்த சில தினங்களாக  விளையாட்டு ரசிகர்களை நுனி சீட்டில் வைத்திருந்த அமெரிக்க பகிரங்க டெனிஸ் போட்டியின் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவின் இன்று முடிவுக்கு வந்தது.

இரண்டு ஹீரோக்கள் நடிக்கும் படத்தில் யாருக்கு அதிகம் வாய்ப்பு வழங்க வேண்டும் என்று தடுமாறும் இயக்குனர்களை போன்று இன்றைய போட்டியை விமர்சித்த வர்ணையாளர்கள் தடுமாறியதை போட்டியை நேரடியாக பார்த்தவர்கள் அறிந்து இருப்பார்கள்.

கொவிட் காரணமாக குறைந்தளவான பார்வையாளர்கள் போட்டியை நேரடியாக பார்த்தாலும் நேரலையில் இன்று பல மில்லியன் விளையாட்டு ரசிகர்கள் பார்த்த இந்த போட்டியில் அவுஸ்திரிய வீரரான டொமினிக் தீம் மற்றும் ஜெர்மனிய வீரரான அலெக்ஸன்டர் சுவ்ரவ் மோதினார்கள்.

அமெரிக்காவில் தற்போது புட்போல் போட்டிகள் நடைப்பெற்று வரும் நிலையிலும் இந்த போட்டி நியோர்க நகரை அழகுப்படுத்தி இருந்தது.

ஆரம்பத்தில் இருந்து இரண்டு வீரர்களும் கடுமையாக மோதினார்கள் . இருவருக்கும் இந்த வெற்றி முக்கியமானது.

இதுவரை ஒரு தடவை கூட இருவரும் கிரான்ட் ஸ்லாம் பட்டம் பெற்று இருக்கவில்லை. அதனால் இன்று பெறும் வெற்றி தங்களுக்கு  முக்கியம் என இருவரும் நம்பினார்கள்.


இதற்கமைய  2-6 4-6 6-4 6-3 7-6 (8-6)  என்ற செட் கணக்கில் தீம் வெற்றி ஈட்டி மூன்று மில்லியன் அமெரிக்க டொலர்களுடன் கிண்ணத்தை சுவிகரித்து கொண்டார்.

ஆனாலும் தரப்படுத்தல் வரிசையில் 100 வது இடத்தையும் கடந்து இருந்த இவர்கள் இருவரும் கடுமையான பயிற்சி காரணமாக இன்று முன்னிலைக்கு வந்துள்ளனர்.

குறிப்பாக ஆரம்ப இரண்டு செட்டுகளிலும் பின்னோக்கி நின்ற தீம் பின்பு படத்தில் வரும் ஹீரோ போன்று ஜெர்மனிய வீரரான அலக்ஸெண்டரை போட்டு தாக்கியது 1949 ஆண்டு விளையாடிய  அமெரிக்க வீரரான பஞ்சோ கொன்ஸலாஸ் அவர்களை நமக்கு ஞாபகம் ஊட்டியது .

27 வயதான தீம்  தம்மை எதிர்த்த 23 வயதான அலெக்ஸன்டரை இறுதியில் கட்டி அனைத்ததை விளையாட்டு ரசிகர்கள் ஆனந்த கண்ணீரோடு பாரட்டினார்கள்.

administrator

Related Articles