அமைச்சில்லை அதிகாரமில்லை சாட்டு சொல்லி ஓட வேண்டாம் – அனுஷா

அமைச்சில்லை அதிகாரமில்லை சாட்டு சொல்லி ஓட வேண்டாம் – அனுஷா

பாதிக்கப்பட்ட நிவ்வெளி தோட்ட மக்களுக்கு வீடுகளை கட்டிக்கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளுங்கள் – அனுஷா சந்திரசேகரன் கோரிக்கை விடுத்துள்ளார்

நோர்வூட் நிவ்வெளி தோட்டத்தில் தீக்கரையான வீடுகளை பார்வையிட்ட சந்திரசேகரன் மக்கள் முன்னணியின் செயலாளர் அனுஷா சந்திரசேகரன் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்திருந்தார்.

இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அனுஷா சந்திரசேகரன்,

ஹொலிரூட், சென்க்ளாயர், அகரகந்தை தொடர் குடியிருப்பு தீ விபத்துகள் ஏற்பட்டு அவர்களுக்கு இதுவரையும் ஒரு தீர்வும் எட்டப்படாத நிலையில் நோர்வூட் நிவ்வெளி தோட்டத்திலும் தீ விபத்து ஏற்பட்டிருப்பது அம் மக்களின் வாழ்வை நிலைகுலைய செய்திருக்கிறது.

ஏற்கனவே பாரிய குடிநீர் பிரச்சினைக்கு முகங்கொடுத்திருந்த இம்மக்கள் தற்சமயம் வீடுகளும் இன்றி தவித்துக்கொண்டிருக்கின்றனர்.

இம் மக்களின் வாக்குகளால் பாராளுமன்றம் தெரிவுசெய்யப்பட்டவர்கள் எங்களிடம் அமைச்சில்லை , அதிகாரம் இல்லையென காலத்தை கடத்தாமல் இம்மக்களுக்கான நிரந்தர தீர்வுகளை செயற்படுத்த முன்வர வேண்டும் எனவும் தெரிவித்தார் .

administrator

Related Articles