அரசாங்கத்திற்கு பேராயர் கொடுத்துள்ள காலகெடு

அரசாங்கத்திற்கு பேராயர் கொடுத்துள்ள காலகெடு

எதிர்வரும் ஏப்ரல் 21 ஆம் திகதிக்கு முன்னர் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த வேண்டும் என பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்ஜித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

அவ்வாறு இல்லாவிட்டால் நாடு தழுவிய பாரிய போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் அரசாங்கத்திடம் தெரிவித்துள்ளார்.

தமது போராட்டத்திற்கு எவ்வாறான தடைகள் வந்தாலும் மக்களுடன் இணைந்து நீதியை பெற தொடர்ந்தும் போராட தயார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நேற்று (22) கொழும்பில் உள்ள ஆலயம் ஒன்றில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு நீதி வேண்டி இடம்பெற்ற விசேட திருப்பலி ஆராதனையின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிpத்த போதே அவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

administrator

Related Articles