அருணாச்சலப் பிரதேசம் அருகே சீன ரயில் திட்டம் இந்தியாவுக்கு கவலை தரும் விஷயமா?

அருணாச்சலப் பிரதேசம் அருகே சீன ரயில் திட்டம் இந்தியாவுக்கு கவலை தரும் விஷயமா?

சீன அதிபர் ஷி ஜின்பிங் சமீபத்தில் சிச்சுவான்-திபெத் ரயில்வே திட்டத்தை எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக முடிக்குமாறு அதிகாரிகளைக் கேட்டுக் கொண்டுள்ளார். யான்-லின்சி ரயில் பாதை திட்டத்தை நிறைவு செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

சீனாவின் சிச்சுவான் மாகாணத்துடன் திபெத்தின் லின்ஜியை யான்-லின்சி ரயில் பாதை இணைக்கும்.

திபெத்தின் இந்தப் பகுதி இந்தியாவின் அருணாசலப்பிரதேச எல்லைக்கு மிக அருகில் உள்ளது.

எல்லைப் பகுதிகளின் ஸ்திரத்தன்மைக்கு இந்த ரயில் பாதைகள் மிகவும் முக்கியமானவை என்று ஷி ஜின்பிங் கூறுகிறார்.

சீனாவின் அதிகாரபூர்வ செய்தி ஊடகமான குளோபல் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தியின்படி இந்த முழு திட்டமும் 47.8 பில்லியன் டாலர் மதிப்புடையது.

இந்த ரயில் பாதையினால் , சிச்சுவான் தலைநகர் செங்டுவில் இருந்து திபெத்தின் லாசாவிற்கு பயணம் செய்ய 13 மணி நேரம் பிடிக்கும் , இது இப்போது 48 மணி நேரமாகும்.

இது இந்தியாவுக்கு கவலை தரும் விஷயமா ?

அருணாச்சலப் பிரதேசத்திற்கு அருகில் லின்ஜி என்ற இடம் உள்ளது. அருணாச்சலப் பிரதேசத்தை சீனா தெற்கு திபெத்தின் ஒரு பகுதியாக கருதுகிறது, அதை இந்தியா நிராகரித்து வருகிறது.

“இது புதிய விஷயம் ஒன்றும் அல்ல, இந்தியா முன்பே அறிந்ததுதான் ” என்கிறார் ஜேஎன்யூவில் சீன ஆய்வுகளின் பேராசிரியரான அல்கா ஆச்சார்யா.

இரு நாடுகளுக்கும் இடையே எல்லை இல்லை, இரு நாடுகளும் தங்களை வலுப்படுத்துவதற்கான உள்கட்டமைப்பைப் பற்றி நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன என்கிறார் அவர். அதனால் அழுத்தம் அதிகரித்து வருகிறது. இவை அனைத்தும் ஏற்கனவே இந்தியாவுக்குத் தெரியும். கடந்த 7-8 ஆண்டுகளில் அது வேகம் பெற்றுள்ளது. ஆனால் சீனாவின் உள்கட்டமைப்பு இந்தியாவை விடச் சிறந்ததாகவும், விலை மதிப்பு மிக்கதாகவும் உள்ளது

“சீனா உள்கட்டமைப்பை மேம்படுத்தும் போதெல்லாம் , அதில் ஒரு இராணுவ கண்ணோட்டமும் உள்ளது,” என்கிறார் பாதுகாப்பு ஆய்வுகள் மற்றும் பகுப்பாய்வு நிறுவனத்தின் பேராசிரியர் புன்சுக் ஸ்தோப்தான்.

இதன் பொருள், உள்கட்டமைப்பை உருவாக்குவதன் மூலம் சீனா இந்தியாவின் எல்லை வரை ஏவுகணைகளைக் கொண்டு வர முடியும் என்கிறார் அவர். பின் அவர்களுக்கு அணு ஆயுதங்கள் தேவையில்லை. ஏவுகணைகளை வைத்தே அவர்கள் குறி வைக்கலாம். கஜகஸ்தான், கிர்கிஸ்தான் போன்ற இடங்களில் இது போல நான் பார்த்திருக்கிறேன், அவர்கள் முதலில் ரயில் பாதையை உருவாக்குகிறார்கள், இது அவர்களின் ஏவுகணை திறனை அதிகரிக்கிறது. இங்கு இந்தியாவும் பாகிஸ்தானும் நேரடியாக அணு குண்டு பற்றிப் பேசிக் கொண்டிருக்கின்றன . சீனாவின் உத்தி என்னவென்றால் , அணு ஆயுதங்கள் பற்றி பேசாது , ஆனால் நான்குபுறமும் சூழ்ந்து விடும். “

இந்த ரயில்வே திட்டத்தைப் பற்றி இந்தியா ஏன் கவலைப்பட வேண்டும்?

பிரம்மபுத்திரா ஆறு இந்தியாவில் இந்த பகுதியில் முக்கிய நீர் ஆதாரமாக உள்ளது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த நீரை தன்பக்கம் திசை திருப்ப சீனா விரும்புவதாக செய்திகள் கூறுகின்றன.

இந்த திட்டம் முடிந்த பிறகு, இந்த பகுதியில் சீன இராணுவத்தின் நடமாட்டம் அதிகரிக்கும் என்றும் அவர் கூறுகிறார். முன்பு சீன இராணுவம் அங்கு அடைய 36 மணி நேரம் ஆகும், இப்போது அது 9-10 மணி நேரத்தில் அடைய முடியும் , அதாவது, விரைவாக படைகளை நிறுத்த முடியும். மேலும், சீனாவின் டாங்குகள் மற்றும் ஏவுகணைகளை இந்திய எல்லைக்கு எளிதாக கொண்டு வந்து விடமுடியும்.

administrator

Related Articles