அருண் விஜய் மகனை நடிகராக அறிமுகப்படுத்தும் சூரியா!

அருண் விஜய் மகனை நடிகராக அறிமுகப்படுத்தும் சூரியா!

நடிகர் சூரியா தனது 2டி எண்டெர்டெயின்மெண்ட் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தின் மூலம் நடிகர் அருண் விஜய் மகனை நடிகராக அறிமுகப்படுத்துகிறார். அந்த படத்தின் பூஜையில், சூரியா, அருண் விஜய், அவரது மகன் ஆர்னவ் விஜய், விஜயகுமார் ஆகியோர் பங்கேற்ற புகைப்படம் வைரலாகி வருகிறது.

நடிகர் சூரியா நடிப்பதோடு மட்டுமல்லாமல் தனது 2டி எண்டெர்டெயின்மெண்ட் தயாரிப்பு நிறுவனம் மூலம் திரைப்படங்களையும் தயாரித்து வருகிறார். இயக்குனர் சுதா கொங்காரா இயக்கத்தில் சூரியா நடித்து தயாரித்த சூரரைப் போற்று படம் ஓடிடியில் வெளியாகி விமர்சன ரீதியாகவும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது.

பொதுவாக சூரியா தயாரிக்கும் திரைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல படங்களாக இருக்கும் என்ற நம்பிக்கை நிலவுகிறது.

இது குறித்து அருண் விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில், “உங்கள் எல்லாருடைய ஆசீர்வாதங்களுடனும், எனது மகன் ஆர்னவ் விஜய் இன்று நடிகராக அறிமுகமாகிறார் என்று அறிவிப்பதில் மிகுந்த மகிழ்ச்சி! நடிகர் சூரியாவால் அவன் நடிகராக அறிமுகமாகிறார் என்பதில் பெருமிதம் கொள்கிறேன். தலைமுறைகளுக்குப் பிறகு தொடரும் இந்த நட்புறவை வேறு எங்கும் கேட்க முடியாது” என்று தெரிவித்துள்ளார்.

administrator

Related Articles