” அவங்க டோச்சர் தாங்க முடியல்ல” சர்வதேச கிரிக்கெட்டுக்கு விடை கொடுத்த அமீர்!!

” அவங்க டோச்சர் தாங்க முடியல்ல”   சர்வதேச கிரிக்கெட்டுக்கு விடை கொடுத்த அமீர்!!

பாகிஸ்தான் அணியின் வேக பந்து வீச்சாளரான மொகமட் அமீர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகத்தின் அழுத்தம் தம்மை இந்த நிலைக்கு தள்ளி இருப்பதாக 28 வயதான மொகமட் அமீர் கூறுகிறார்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் லங்கா பிரிமியர் லீக்கில் காலி அணி சார்பாக திறமையாக விளையாடிய மொகமட் அமீரின் இந்த தீர்மானம் ரசிகர்களுக்கு வருத்தத்தை தந்திருக்கிறது.

அவரது இந்த முடிவு தனிப்பட்ட தீர்மானம் எனவும் இதனை மதிப்பதாக பாகிஸ்தான் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் பிரதம நிறைவேற்று அதிகாரியான வசிம் கான் கூறினார்.

இதுவரை 36 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 119 விக்கெட்டுகளை கைப்பற்றிய அமீர் தமது 17 வயதில் முதல் சர்வதேச போட்டியில் விளையாடினார்.

அவர் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 81 விக்கெட்டுகளையும் T20 போட்டிகளில் 59 விக்கெட்டுகளையும் கைப்பற்றியமை குறிப்பிடதக்கது.

administrator

Related Articles