அவசரமாக வந்த மெத்திவ்ஸ், காரணம் வெளியானது

அவசரமாக வந்த மெத்திவ்ஸ், காரணம் வெளியானது

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் இருந்து இலங்கை அணியின் சிரேஸ்ட வீரர் ஏஞ்சலோ மெத்திவ்ஸ் விலகியுள்ளார்.

அவர் தற்போது நாட்டை வந்தடைந்துள்ளதாக ஸ்ரீ லங்கா கிரிக்கெட் அறிக்கை ஒன்றின் மூலம் அறிவித்துள்ளது.

தனது வீட்டில் இடம்பெறவுள்ள நிகழ்வு ஒன்றில் கலந்துக்கொள்ளவே அவர் இலங்கைக்கு வந்துள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது.

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 3 போட்டிகளைக் கொண்ட தொடரை இலங்கை மெத்திவ்சின் தலைமையில் என இழந்தது.

தற்போது இரு அணிகளுக்கும் இடையிலான ஒரு நாள் தொடர் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடதக்கது.

ஏற்கனவே நடைப்பெற்ற முதலாவது ஒரு நாள் போட்டியில் இலங்கை அணி தோல்வியடைந்த நிலையில் இரண்டாவது ஒரு நாள் போட்டி இலங்கை நேரப்படி நாளை அதிகாலை இடம்பெறவுள்ளது.

administrator

Related Articles