அவிஸ்கவின் அபார துடுப்பாட்டத்தில் வென்ற யாழ் அணி!!! தமிழ் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை! ( video)

அவிஸ்கவின் அபார துடுப்பாட்டத்தில் வென்ற யாழ் அணி!!! தமிழ் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை! ( video)

லங்கா பிரிமியர் லீக்கின் இரண்டாம் போட்டி இன்று ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டரங்கில் நடைப்பெற்றது.

இன்றைய போட்டியில் யாழ் மற்றும் காலி அணிகள் மோதின . யாழ் அதாவது ஜேப்னா ஸ்டேலியன்ஸ் அணியில் உள்ளாவங்கப்பட்டிருக்கும் கிளிநொச்சி எக்ஸ்பிரஸ் என அழைக்கப்படும் வேகபந்து வீச்சாளர் செபஸ்டியன் பிள்ளை விஜயராஜ்க்கு வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அவருக்கோ அணியில் இருக்கிற ஏனைய தமிழ் வீரர்களோக்கோ வாய்ப்பு வழங்கப்படவில்லை.இதனை பலர் சமூக வலைத்தளங்கள் ஊடாக கண்டித்து கவலையை வெளியிட்டுள்ளனர்.

இன்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய காலி கிளியாடியேட்ர்ஸ் அணி அதிரடி மன்னன் சயிட் அப்ரிடியின் அதிரடி ஆட்டத்தால் 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 175 ஓட்டங்களை பெற்றது. இதில் அப்ரிடி 23 பந்துகளில் 6 சிக்ஸர்கள் 4 பவுண்டரிகளுடன் 58 ஓட்டங்களை பெற்றார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய யாழ் ஸ்டேலியன்ஸ் அணி அவிஸ்க பெர்ணான்டோவின் விறுவிறுப்பான ஆட்டம் காரணமாக 19. 3 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை இழந்து 176 ஓட்டங்களை பெற்று வெற்றீட்டியது.

இதில் அவிஸ்க ஆட்டமிழக்காமல் 93 ஓட்டங்களை பெற்றார்.

இதேவேளை நாளை கண்டி தம்புல்ல அணிகள் மோதுகின்றன. இது குறித்து தசுன் ஷானக்க சொன்ன கருத்துக்கள்

administrator

Related Articles