அவுஸ்திரேலிய அணிக்கெதிரான போட்டியில் இங்கிலாந்து வெற்றி !!!

அவுஸ்திரேலிய அணிக்கெதிரான போட்டியில் இங்கிலாந்து வெற்றி !!!

இங்கிலாந்திற்கு சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான இன்றைய பகல் இரவு போட்டியில் இங்கிலாந்து அணி 24 ஓட்டங்களால் வெற்றியீட்டி 3 போட்டிகளை கொண்ட தொடரை 1-1 சமநிலைப்படுத்தியுள்ளது.

மென்சஸ்டர் ஓல்ட்டிரபோட்டில் இன்று 13 ஆம் திகதி  நடைப்பெற்ற  போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி  முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கியது.

அதிக ஓட்டங்களை குவிக்கலாம் என்ற கணிப்பில் களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு 9 விக்கட்டுகளை இழந்து  231 ஓட்டங்களை மட்டுமே பெற முடிந்தது .

அணித்தலைவர் எரின்  மோர்கன் 42 ஓட்டங்களையும் ஜே. ஈ. ரூட் 39 ஓட்டங்களையும் பெற்றனர் பந்து வீச்சில் சுழல் பந்துவீச்சில் ஷம்பா 36 ஓட்டங்களுக்கு மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

பதிலுக்கு  துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி ஐந்தாவது விக்கெட் விழும் வரை போட்டியை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது.

32. 3 ஓவர்கள் இருக்கும் வேளையில் தனது  ஐந்தாவது விக்கெட்டாக அணித்தலைவர் ஆரோன் பின்ச்  145  ஓட்டங்களை பெற்ற போது அவுஸ்திரேலிய அணி இழந்தது.

அதன் பிறகு இங்கிலாந்து பந்து வீச்சாளர்கள்  ஏனைய வீரர்களை இலகுவாக ஆட்டமிழக்க செய்து வெற்றீட்டியது.

இதில் ஆரோன் பின்ச் 73 ஓட்டங்களை பெற்றார். எஸ்.எம். கரன், வோர்க்ஸ், ஆர்சார் ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார்கள்.

மூன்றாவதும் இறுதியுமான போட்டி எதிர்வரும் 16 ஆம் திகதி இடம்பெறுகிறது.

administrator

Related Articles