ஆசிய கனேடியர்கள் மீது குரோதப்பேச்சு

ஆசிய கனேடியர்கள் மீது குரோதப்பேச்சு


ஆசியாவை பூர்வீகமாகக் கொண்ட கனேடியர்கள் மீது குரோதப் பேச்சுக்கள் கட்டவிழ்த்துவிடப்படுவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
கொவிட் நோய்த் தொற்று பரவுகை காலத்தில் இந்த நிலைமை உயர்வடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது இந்த ஆண்டில் ஆசியர்களுக்கு எதிரான இனவெறி குற்றச் செயல்கள் 600 முதல் 700 வீதம் வரையில் உயர்வடைந்துள்ளது.

இனம், தோல் நிறம் உள்ளிட்ட விடயங்களின் அடிப்படையில் குரோதப் பேச்சுக்கள் அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது.

சீனா மற்றும் கொரியா ஆகிய நாடுகளை பூர்வீகமாகக் கொண்ட கனேடியர்கள் அதிகளவில் இந்த குரோதப் பேச்சுக்களினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

administrator

Related Articles