ஆசிய குத்துச்சண்டை சாம்பியன் தொடர் மே மாதத்தில்

ஆசிய குத்துச்சண்டை சாம்பியன் தொடர் மே மாதத்தில்

இந்த வருட ஆசிய குத்துச்சண்டை சாம்பியன் தொடர் இந்தியாவில் நடைபெறவுள்ளதாக சர்வதேச குத்துச்சண்டை சம்மேளனம் அறிவித்துள்ளது.

அதற்கமைய இந்த போட்டிகள் எதிர்வரும் மே மாதம் 21 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை நடத்தப்படும் என அந்த சம்மேளனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.

கடந்த வருடம் இந்த போட்டிகளை நடத்த திட்டமிடப்பட்டிருந்தாலும் கொவிட் அச்சுறுத்தல் காரணமாக அது இந்த வருடம் வரை ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.

கடந்த 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற குத்துச்சண்டை சாம்பியன் தொடரில் 34 நாடுகளைச் சேர்ந்த 304 குத்துச்சண்டை வீரர்கள் கலந்துக்கொண்டிருந்தனர்.

ஆனால் இந்த வருடம் அந்த எண்ணிக்கை அதிகரிக்கலாம் என சர்வதேச குத்துச்சண்டை சம்மேளனம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

administrator

Related Articles