ட்விட்டர் தனது சரிபார்ப்பு கணக்குககளை ஏப்ரல் 1 முதல் நீக்க முடிவு செய்துள்ளது.
அதன்படி, ‘நியூயோர்க் டைம்ஸ்’ (new york)நாளிதழின் டுவிட்டர் கணக்கின் அங்கீகரிப்பு சின்னங்கள் நீக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நியூயார்க் டைம்ஸ் உட்பட பல நிறுவனங்கள் மற்றும் பிரபலங்கள் தங்கள் ட்விட்டர் கணக்குகளில் சரிபார்ப்பு பேட்ஜ்களுக்கு பணம் செலுத்த மாட்டோம் என்று கூறியதை அடுத்து ட்விட்டர் இந்த முடிவை எடுத்துள்ளது.
இதற்கிடையில், சிஎன்என், லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் மற்றும் வாஷிங்டன் போஸ்ட் உள்ளிட்ட பல செய்தி நிறுவனங்கள் ட்விட்டர் சரிபார்ப்புக்கு பணம் செலுத்துவதில்லை என்று கூறியுள்ளன.