ஆட்ட நாயகன் ருதுராஜ் கெய்க்வாட்டின் அபார ஆட்டத்தில் ஆர்சிபியை வீழ்த்தி சென்னைக்கு அரிய வெற்றி

ஆட்ட நாயகன் ருதுராஜ் கெய்க்வாட்டின் அபார ஆட்டத்தில் ஆர்சிபியை வீழ்த்தி சென்னைக்கு அரிய வெற்றி

சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் முகத்தில் மீண்டும் மகிழ்ச்சி வெளிப்படத் துவங்கியுள்ளது. 

துபாயில் ஞாயிறன்று நடைபெற்ற மதியப் போட்டியில் விராட் கோலி தலைமையிலான ஆர்சிபி அணியை 20 ஓவர்களில் 145/5 என்று மட்டுப்படுத்திய தோனி தலைமை சிஎஸ்கே, பிறகு இளம் வீரர் ருதுராஜ் கெய்க்வாடின் ‘ஸ்பார்க்ளிங்’ அரைசதம் (65) மூலம் 18.4 ஓவர்களில் 150/2 என்று அபார வெற்றி பெற்றது.

இதன் மூலம் பிளே ஆஃப் வாய்ப்பு நூலிழையில் இன்னும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இருக்கிறது.

சென்னை அணிக்கு இன்றைய தினம் இளம் வீரர்கள் ருதுராஜ் கெய்க்வாட், சாம் கரண், தீபிக் சாகர் போன்றோர் மிகச்சிறப்பாக செயலபட்டனர். எட்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெங்களூரு அணியை அபாரமாக வீழ்த்தியுள்ளது சென்னை. இதன் மூலம் புள்ளிபட்டியலிலும் ஏழாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. 

மும்பை இந்தியன்ஸ் அணியுடனான கடந்த போட்டியில் பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்திலுமே மோசமாக செயல்பட்டிருந்தது சென்னை சூப்பர் கிங்ஸ்.

அந்தப் போட்டியில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து ஐபிஎல் வரலாற்றில் அந்த அணியின் மிக மோசமான தோல்வியை பதிவு செய்தது. ஆனால் 48 மணிநேரத்துக்குள் சென்னை அணி முற்றிலும் மாறுபட்டு அனைத்து துறையிலும் சிறப்பாக விளையாடியது.

சென்னை அணியின் அனைத்து வீரர்களும் அணிக்கு தேவையான பங்களிப்பை வழங்கினர். 

இளைஞர்களிடம் ஸ்பார்க் இல்லை என்றார் தோனி, வாய்ப்பு கொடுத்தால்தானே ஸ்பார்க் இருக்கிறதா இல்லையா என்று தெரியும். இவர் ஏதோ உடம்புக்குள் புகுந்து பார்த்தது போல் ஸ்பார்க் இல்லை என்றார், ஆனால் இன்று தொடக்கத்தில் இறங்கிய ருதுராஜ் கெய்க்வாட் கடைசி வரை ஆட்டமிழக்காமல் நின்று ஆட்டத்தை வெற்றிகரமாக பினிஷ் செய்து கொடுத்துள்ளார்.

administrator

Related Articles