ஆயிரம் விளக்கு தொகுதியில் “குஷ்பூ” போட்டி!!

ஆயிரம் விளக்கு தொகுதியில் “குஷ்பூ” போட்டி!!

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறவுள்ளது. கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டை நிறைவு செய்த கட்சி தற்போது வேட்பாளர் பட்டியலை வெளியிடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

அ.தி.மு.க கூட்டணியில் பா.ஜ.கவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அந்தவகையில், பா.ஜ.க கட்சி போட்டியிடும் 20 தொகுதிகளில் முதற்கட்டமாக 17 தொகுதி வேட்பாளர்களின் பட்டியலை பா.ஜ.க தேசியச் செயலாளர் அருண் சிங் வெளியிட்டார்.

அதன்படி, ‘தாராபுரம் தனித் தொகுதியில் எல்.முருகன், காரைக்குடியில் எச்.ராஜா, ஆயிரம் விளக்கு தொகுதியில் குஷ்பூ, அரவக்குறிச்சி தொகுதியில் அண்ணாமலை, கோயம்புத்தூர் தெற்கு தொகுதியில் வானதி ஸ்ரீனிவாசன், நாகர்கோவில் தொகுதியில் எம்.ஆர்.காந்தி, துறைமுகம் தொகுதியில் வினோஜ் செல்வம், திருவண்ணாமலை தொகுதியில் தனிகைவேல், திருக்கோவிலூர் தொகுதியில் முன்னாள் எம்.எல்.ஏ கலிவரதன், மொடக்குறிச்சி தொகுதியில் சி.கே.சரஸ்வதி, திருவையாறு தொகுதியில் பூண்டி வெங்கடேசன், மதுரை வடக்கு தொகுதியில் தற்போது தி.மு.க எம்.எல்.ஏவாக இருக்கும் சரவணன், விருதுநகர் தொகுதியில் பாண்டுரங்கன், ராமநாதபுரம் தொகுதியில் குப்புராம், திருநெல்வேலி தொகுதியில் நயினார் நாகேந்திரன், குளைச்சல் தொகுதியில் ரமேஷ், திட்டக்குடி தொகுதியில் டி.பெரியசாமி’ ஆகியோர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர்

முதற்கட்டமாக அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர்களில் குஷ்பு, எல்.முருகன், அண்ணாமலை, வானதிஸ்ரீனிவாசன், எச்.ராஜா, நயினார் நாகேந்திரன் ஆகியோர் தமிழகம் முழுவதும் அறியப்பட்டவர்கள். கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனை வானதி ஸ்ரீனிவாசன் எதிர்கொள்கிறார் என்பதால் அந்த தொகுதியில் பரபரப்பாக இருக்கும்

பா.ஜ.க போட்டியிடும் 20 தொகுதிகளில் தி.மு.கவுடன் 14 தொகுதிகளில் நேரடியாக மோதுகிறது

administrator

Related Articles