ஆரம்ப ஆட்டக்காரர்களின் அதிரடி ! மேற்கிந்திய தீவுகள் அணிக்கு கொடுத்த பதிலடி!! இலங்கை அணி 43 ஓட்டங்களால் வெற்றி!! (Video)

ஆரம்ப ஆட்டக்காரர்களின் அதிரடி ! மேற்கிந்திய தீவுகள் அணிக்கு கொடுத்த  பதிலடி!!  இலங்கை அணி 43 ஓட்டங்களால் வெற்றி!! (Video)

கடந்த புதன் கிழமை நடைப்பெற்ற போட்டியில் சிக்ஸர்கள் விலாசி இலகுவாக இலங்கை அணியை தோற்கடித்து  கூலர்ஸ் மைதானத்தில் கலர்ஸ் காட்டிய மேற்கிந்திய தீவகள்  அணி இன்றைக்கு தலையை குனிஞ்சு போனாங்க

ஆள் வளர்ந்தப்பால அறிவு வளர இல்ல என்று சொல்லுவாங்க.. அப்படி தான் இன்றைக்கு  மேற்கிந்திய தீவுகள் அணிக்கும் நடந்தது.

இலங்கை அணி இன்றைய போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

என்னாட  திரும்பவமும் மண்ணை கவ்வ போறாங்களா என்று யோசிச்சு கொண்டிருந்த போது வழமையா வருகிற ஆரம்ப துடுப்பாட்டக்காரங்க வரமால் புதுசா ஒரு ஜோடி
தனுஷ்க குணதிலக்க மற்றும் பத்தும் நிசாங்க இரண்டுபேரும்  அதிரடியாக சரவெடி அடிகளை அடித்து முதல் பத்து ஓவர்களில் 95 ஓட்டங்களை விக்கெட் இழப்பின்றி பெற்றனர்.

இந்த ஆரம்ப ஓட்டத்தை கொண்டு இலங்கை அணி பெரிய இலக்கை நோக்கி செல்லும் என எதிர்பார்த்தோம் யார் கண் பட்டதோ  லழமை போல நம்ம வீர்கள் ” சும்மா இருடா ” என சொல்லி வச்சது போல   அடுத்தது ஆட்டமிழந்தார்கள்.

ஒரு மாதிரியாக ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களின் துணையோடு இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 160 ஓட்டங்களை பெற்றது.

இதில் தனுஷ்க குணதிலக்க 56 ஓட்டங்களை பெற்றார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி வழமை போல அதிரடி ஆட்டத்தை ஆட நினைத்தார்கள். ஆனால் இலங்கை வீசிய பந்துக்கள் இன்றைக்கு அவங்க கண்ணுக்கு பம்பரமாக விளங்கி இருக்கிறது.

9 ஓட்டங்கள் பெற்ற போது முதல் விக்கெட்டை இழந்த மேற்கிந்திய தீவுகள் அணி இலங்கையின் சுழபந்து வீச்சாளர்களுக்கு தடுமாறின.

குறிப்பாக ஹசரங்க வீசிய பந்து அவர்களுக்கு பயத்தையே ஏற்படுத்தியது. அதேபோல லக்ஸன் சந்த கேன் , அகில தனஞ்செய ஆகியோரும் திறமையாக வீசி 18. 4 ஓவர்களில் மேற்கிந்திய தீவுகள் அணியின் கதையை முடித்தார்கள்.

ஹசரங்க மூன்று விக்கெட்டுகளையும் சந்த கேன் மூன்று விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

அவர்கள் 117 ஓட்டங்களை மட்டுமே பெற்றனர். இதன்படி 43 ஓட்டங்களால் இலங்கை அணி வெற்றிபெற்றது.

இந்த வெற்றி இலங்கை அணிக்கு மிக முக்கியம் வாய்ந்தது ஏனெனில் இதற்கு முன்னர் விளையாடிய ஏழு T20 போட்டிகளில் இலங்கை அணி தோல்வியை தொடர்ச்சியாக பெற்று இருந்தது.

இன்றைய வெற்றி ஞாயிற்றுகிழமை இடம்பெறும் தொடரின் மூன்றாவது இறுதி போட்டிக்கு பெரிய பலமாக அமையும் . இலங்கை தொடர் வெற்றியை பெற வாழ்த்துவோம்.

administrator

Related Articles