ஆரம்ப ஜோடியின் அசத்தல் தம்புள்ள அணி கலக்கல்!!

ஆரம்ப ஜோடியின் அசத்தல் தம்புள்ள அணி கலக்கல்!!

ஹம்பாந்தோட்டையில் இன்று நடைப்பெற்ற லங்கா பிரிமியர் லீக்கின் 12 போட்டியில் தம்புள்ள வைக்கிங்ஸ் அணி 9  ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

காலி கிளாடியைட்டர்ஸ் அணிக்கெதிராக நடைப்பெற்ற இந்த போட்டியில் தம்புள்ள அணியின் ஆரம்ப ஜோடியான உபுல் தரங்க மற்றும் நிரோஷன் திக்வெல்ல ஆகியோரின் சிறப்பான ஆட்டம் தம்புள்ள அணியை 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கட்டுக்கள் இழப்பிற்கு 204 ஓட்டங்கள் வரை கொண்டு சென்றது.

கடந்த சில போட்டிகளில் சரியாக ஆடாத நிரோஷன் திக்கவெல்ல இன்றைக்கு வந்த பந்துகளை எல்லாம் அடித்ததை பார்த்தோம்.

அவர் 37 பந்துகளில் 3 சிக்ஸர்கள் 5 பவுண்டரிகளுடன் 60 ஓட்டங்களை பெற்றார். அதேபோல் நிதானமாக ஆடிய உபுல் தரங்க 54 ஓட்டங்களுக்கு 77 ஓட்டங்களை பெற்றார்.

இவர்கள் இருவரும் சேர்ந்து முதல் விக்கெட்டுக்காக பெற்ற ஓட்டம் 110 அதன் பிறகு தசுன் சாணக்க அணியை 204 வரை கொண்டு செல்ல துணை நின்றார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய காலி கிளாடியேட்ர்ஸ் அணி இறுதிவரை போட்டியை கொஞ்சம் கூட விட்டு கொடுக்காமல் விளையாடியது. ஒரு கட்டத்தில் காலி அணி வெற்றி பெறும் என்று நினைத்தோம்.

ஆனால் தசுனின் சாணக்கிய வழிநடத்தல் தம்புள்ளை அணியை வெற்றிக்கு கொண்டு சென்றது

தம்புள்ளை அணி தங்களது 20 ஓவர்கள் முடிவிலு 7 விக்கெட்டுகளை இழந்து 198 ஓட்டங்களை பெற்றது.

இதில் தனுஸ்க குணதிலக்க 78 ஓட்டங்களையும் அசாம் கான் 55 ஓட்டங்களையும் பெற்றனர். பந்து வீச்சில் அன்வர் அலி மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

administrator

Related Articles