ஆர்னோல்டுக்கு ஆப்பு முதல்வரானார் மணிவண்ணன்

ஆர்னோல்டுக்கு ஆப்பு முதல்வரானார் மணிவண்ணன்

யாழ்.மாநகர சபையின் புதிய முதல்வராக சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவாகியுள்ளார்.

இன்று (30) சற்றுமுன்னர் மாநகர முதல்வர் தெரிவுக்காக யாழ் மாநகரசபையில் நடைபெற்ற பொது வாக்கெடுப்பில், ஈபிடிபி உறுப்பினர்களின் ஆதரவுடன் மணிவண்ணன் முதல்வரானார்.

வாக்கெடுப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் முதல்வர் இ.ஆனோல்ட்டுக்கு ஆதரவாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 15 உறுப்பினர்கள், ஐக்கிய தேசியக் கட்சியின் 3 உறுப்பினர்கள், தமிழர் விடுதலைக் கூட்டணி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலா ஒரு உறுப்பினர் என 20 உறுப்பினர்கள் வாக்களித்தனர். மணிவண்ணனுக்கு ஆதரவாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் 10 உறுப்பினர்கள், ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் 10 உறுப்பினர்கள், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஒரு உறுப்பினர் என 21 உறுப்பிர்கள் வாக்களித்தனர்.

நால்வர் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. அமர்வில் பங்குகொண்டு வாக்கெடுப்பில் பங்குகொள்ளாதவர்களில் ஒருவர் தமிழரசுக்கட்சி உறுப்பினர், மூவர் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

administrator

Related Articles