ஆர்ப்பாட்டாக்கார்கள் இருவரின் மரணம்! பதவி விலகிய இடைக்கால ஜனாதிபதி!

ஆர்ப்பாட்டாக்கார்கள் இருவரின் மரணம்! பதவி விலகிய இடைக்கால ஜனாதிபதி!

கடந்த சில தினங்களாக பெரூ நாட்டின் இடைக்கால ஜனாதிபதிக்கு எதிராக பொதுமக்கள் சாலைகளை மறைத்து ஆர்ப்பாட்டம் செய்து வந்தனர். இதில் இருவர் கொல்லப்பட்டனர் .

இந்த சம்பவத்தின் எதிரொலியாக தமது பதவியை இராஜினமா செய்வதாக பெரூ நாட்டின் இடைக்கால ஜனாதிபதி மெனுவேல் மரினோ இன்று அறிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி மார்டின் விஸ்காரா மீது உழல் மற்றும் மோசடி குற்றசாட்டுக்கள் சுமத்தப்பட்டு அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரனை கொண்டு வரப்பட்டது.

இதில் ஜனாதிபதியை பதவியில் இருந்து விலக்கினார்கள். இதனையடுத்து பெரூ நாட்டின் ஜனாதிபதியாக பாரளுமன்ற சபாநாயகர் மெனுவேல் மரினோ இடைக்கால ஜனாதிபதியாக பதவியேற்றார்.

இதனை முன்னாள் ஜனாதிபதியின் ஆதரவாளர்கள் எதிர்த்தார்கள் அத்துடன் பெரூ மக்களின் ஆதரவு முன்னாள் ஜனாதிபதியான மார்டினுக்கே இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

நேற்யைய தினம் இடைக்கால அமைச்சரவையை சேர்ந்த அனைவரும் பதவி விலகியதை தொடர்ந்தே இன்று இடைக்கால ஜனாதிபதி பதவி விலகியுள்ளார்.

.

administrator

Related Articles