ஆல்பர்ட்டாவில் கொவிட் காரணமாக மேலும் ஐவர் மரணம்!!! இறந்தோர் தொகை 432

ஆல்பர்ட்டாவில் கொவிட் காரணமாக மேலும் ஐவர் மரணம்!!! இறந்தோர் தொகை 432

ஆல்பர்ட்டா மாகணத்தில் இன்று நவம்பர் 17 ஆம் திகதி இதுவரை புதிதாக 773 பேருக்கு கொரோனா வைரஸ் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் எட்மன்டன் வலயத்தில் ஐந்து பேர் இன்று உயிரழந்துள்ளனர். இந்த மரணத்தோடு ஆல்பர்ட்டா மாகணத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 432 ஆக அதிகரிக்கிறது.

மரணமானவர்களில் அதிகமானோர் லயோதிப இல்லங்களில் வசிப்பவர்கள்.

தற்போதைய நிலவரத்தின் படி ஆல்பர்ட்டவை வசிப்பிடமாக கொண்ட 268 வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுக்கு மேலதிகமாக ICU வில் 57 பேர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை ஆல்பர்ட்டா மாகணத்தில் கொரோனா அடையாளம் காணப்பட்டோர் எண்ணிக்கை 10,0068 என அறிவிக்கப்பட்டுள்ளது.

administrator

Related Articles