இங்கிலாந்தில் கொரோனா பாதிப்பால் ஒரே நாளில் 744 பேர் உயிரிழப்பு

இங்கிலாந்தில் கொரோனா பாதிப்பால் ஒரே நாளில் 744 பேர் உயிரிழப்பு

இங்கிலாந்தில் ஒரேநாளில் புதிதாக 39,237 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கே 24 மணி நேரத்தில் 744 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

இங்கிலாந்தில் புதிய வகை கொரோனா வைரசால் கடந்த சில தினங்களாக தொற்று அதிகரித்து வருகின்றது. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில், இங்கிலாந்து 6 ஆவது இடத்தில் உள்ளது.

இங்கிலாந்தில் ஒரேநாளில் 39,237 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும், இதன்மூலம் அந்நாட்டில், வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 21,49,551 ஆக அதிகரித்திருப்பதாகவும் தெரியவந்துள்ளது. அங்கு 69,051 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அங்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இங்கிலாந்தில் பரவிவரும் புதிய வகை கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள், இத்தாலி உள்ளிட்ட சில நாடுகளிலும் கண்டறியப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், உலக நாடுகள் நோய் பரவாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

administrator

Related Articles