இங்கிலாந்து ராணிக்கு குளியல் அறையில் கிடைத்த பொக்கிஷம்

இங்கிலாந்து ராணிக்கு குளியல் அறையில் கிடைத்த பொக்கிஷம்

இங்கிலாந்து ராணி 2 ஆம் எலிசபெத்தின் மகள் வழி பேத்தியும் இளவரசியுமான சாரா டின்டாலுக்கு நேற்று (24) ஆண் குழந்தை பிறந்ததுள்ளது.

அந்த குழந்தைக்கு லூகாஸ் பிலிப் டின்டால் என பெயரிடப்பட்டுள்ளது.
இது இளவரசி சாரா டின்டால் மற்றும் இங்கிலாந்து ரக்பி வீரர் மைக் டின்டால் தம்பதியின் 3 ஆவது குழந்தையாகும்.

ஏற்கனவே இந்த தம்பதிக்கு 7 வயதில் ஒரு மகனும், 2 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.

இளவரசி சாரா டின்டால் அரண்மனையின் குளியலறையில் இருந்தபோது அவருக்கு பிரசவ வலி ஏற்பட்ட நிலையில் அவர் உடனடியாக் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட இருந்தார்.

எனினும் வைத்தியசாலைக்கு அழைத்து செல்ல முடியாத நிலையில் குளியல் அறையிலேயே அவர் குழந்தை பெற்றெடுத்ததாக மைக் டின்டால் கூறினார்.

லூகாஸ் பிலிப் டின்டால், இங்கிலாந்து ராணி 2 ஆம் எலிசபெத்தின் 10 ஆவது கொள்ளுப்பேரன் என்பது குறிப்பிடத்தக்கது.

administrator

Related Articles