இந்தியாவை வீழ்த்தி இங்கிலாந்து வெற்றி

இந்தியாவை வீழ்த்தி இங்கிலாந்து வெற்றி


இந்திய – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டுவன்ரி-20 போட்டியில் இங்கிலாந்து அணி எட்டு விக்கட்டுகளினால் அபார வெற்றியை பதிவு செய்துள்ளது.

அஹமதாபாத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

இதன்படி களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கட்டுகளை இழந்து 127 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக்கொண்டது.

இதில் ஸ்ரேஸ் ஐயர் 67 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார்.

பந்து வீச்சில் ஜொப்ரா ஆர்ச்சர் மூன்று விக்கட்டுகளை வீழ்த்தினார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 15.3 ஓவர்களில் இரண்டு விக்கட்டுகளை இழந்து 130 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

இதில் ஜேசன் ரோய் 49 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.
போட்டியின் ஆட்டநாயகனாக ஜொப்ரா ஆர்ச்சர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

administrator

Related Articles