இந்தியா முதலில் துடுப்பெடுத்தாட்டம்

இந்தியா முதலில் துடுப்பெடுத்தாட்டம்

இலங்கை-இந்திய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது பகல்-இரவு டெஸ்ட் போட்டி பெங்களூருவில் ஆரம்பமாகியுள்ளது.

போட்டியில். நாணய சுழற்சியில் இந்தியா அணி வெற்றிப் பெற்றுள்ள நிலையில் முதலில் துடுப்பெடுத்தாட அணித் தலைவர் ரோஹித் சர்மா தீர்மானித்துள்ளார்.

ஏற்கனவே மொகாலியில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 222 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இன்றைய 2 ஆவது டெஸ்ட் போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் பகல்-இரவு போட்டியாக (பிங்க் பந்து டெஸ்ட்) இடம்பெறுகின்றது.

இது இந்தியாவில் நடைபெறும் 3 ஆவது பகல்-இரவு டெஸ்ட் போட்டியாக கருதப்படுகின்றது.

administrator

Related Articles