இந்தியா அபார வெற்றி

இந்தியா அபார வெற்றி

இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியில் இந்திய அணி பத்து விக்கட்டுகளினால் அபார வெற்றியை பதிவு செய்துள்ளது.

அஹமதாபாத்தின் நரேந்திர மோடி மைதானத்தில் பகலிரவு டெஸ்ட் போட்டியாக இந்த போட்டி நடைபெற்றது.

நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடி 112 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. இதில் ஸக் க்ரேவ்லி 53 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

பந்து வீச்சில் அக்ஸர் பட்டேல் ஆறு விக்கட்டுகளை வீழ்த்தினார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 145 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. இதில் ரோஹித் சர்மா 66 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார்.

பந்து வீச்சில் இங்கிலாந்து அணித் தலைவர் ஜோ ரூட் 8 ஓட்டங்களுக்கு ஐந்து விக்கட்டுகளை வீழ்த்தினார்.

இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் 81 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக்கொண்டது. இதில் பென் ஸ்டோக்ஸ் 25 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார்.

பந்து வீச்சில் அக்ஸர் பட்டேல் 5 விக்கட்டுகளையும் அஸ்வின் 4 விக்கட்டுகளையும் வீழ்த்தினர்.

இதன்படி, இந்திய அணிக்கு 49 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இந்திய அணி 7.4 ஓவர்களில் வெற்றியை இலக்கை எட்டியது. இதில் ரோஹித் சர்மா 25 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார்.

இந்திய அணி இந்த தொடரில் இரண்டுக்கு ஒன்று என்ற அடிப்படையில் முன்னிலை வகிக்கின்றது.

administrator

Related Articles