இந்திய அணியில் நடராஜன் சேர்க்கப்பட்டுள்ளார்

இந்திய அணியில் நடராஜன் சேர்க்கப்பட்டுள்ளார்


இந்திய டுவன்ரி20 அணியில் மீண்டும் தமிழக வீரர் நடராஜன் இணைக்கப்பட்டுள்ளார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவதும் இறுதியுமான போட்டியில் நடராஜன் இணைக்கப்பட்டுள்ளார்.

அணியின் ஆரம்ப துடுப்பாட்டவீரர் கே.எல். ராகுலுக்கு பதிலாக நடராஜன் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.

மேலும், ஆரம்பத் துடுப்பாட்டவீரர் ராகுலுக்கு பதிலாக அணித் தலைவர் விராட் கொஹ்லி இன்றைய போட்டியில் ஆரம்ப துடுப்பாட்டவீரராக களமிறங்கியுள்ளார்.

இந்தப் போட்டித் தொடரில் இரண்டு அணிகளும் தலா இரண்டு போட்டிகளில் வெற்றியீட்டியுள்ளதுடன் இந்த இறுதிப் போட்டியில் வெற்றியீட்டும் அணியே போட்டித் தொடரைக் கைப்பற்றும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் இரு அணிகளும் இன்றைய போட்டியில் கடுமையான பலப்பரீட்சை நடாத்தி வருகின்றது.

administrator

Related Articles