சீனக் கப்பல் இந்திய கடற்படையால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக இந்திய செய்தித்தளம் ஒன்று கூறுகிறது.
கடந்த ஆகஸ்ட் மாதம் சீனக் கப்பல் யுவான் வாங் 5 இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்த போது புதுடெல்லியால் நிறுத்தப்பட்டது
அன்றிலிருந்து இலங்கை, இத்தகைய சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருப்பதை உறுதி செய்வதற்கான நிலையான செயற்பாட்டு நடைமுறையில் மேற்கொண்டு வருகின்றது.
இந்தியப் பெருங்கடலில் சீனாவின் நடமாட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், இந்திய கடற்படை கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.
சட்டவிரோத மீன்பிடி
சீனக் கப்பல்கள் இந்த பகுதியில் சட்டவிரோதமான, ஒழுங்குபடுத்தப்படாத மீன்பிடியில் ஈடுபடுவதும் கண்டறியப்பட்டுள்ளதாக இந்திய செய்தித்தளம் கூறுகிறது.
மேலும் சீனாவின் ஒரே வெளிநாட்டு கடற்படைத் தளம் ஜிபூட்டியில் உள்ளது.
இந்தநிலையில் தற்போது நிலவரப்படி, இந்தியப் பெருங்கடலில் சீனப் பிரசன்னம் அதிகரித்துள்ள நிலையில், இந்தியக் கடற்படை அதன் கடல் பிரசன்னத்தையும் கண்காணிப்பையும் கணிசமாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.