விஞ்ஞான ஆராய்ச்சி போட்டியில் முதல் இடம் பெற்ற இலங்கை மாணவிக்கு கிடைத்த கௌரவம்!!!

விஞ்ஞான ஆராய்ச்சி போட்டியில் முதல் இடம்  பெற்ற இலங்கை மாணவிக்கு கிடைத்த கௌரவம்!!!

(எம்.என்.எம்.அப்ராஸ்)

சர்வதேச மற்றும் தேசிய ரீதியிலும் சாதனை படைத்த கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியில் உயரியல் விஞ்சான (bio science) பிரிவில் கல்வி பயிலும் மாணவி இமாம் மௌலானா பாத்திமா ஷைரீன் ஏ.ஆர் மன்சூர் பவுண்டேஷனால் கௌரவிக்கப்படார் .

ஏ.ஆர்.மன்சூர் பவுண்டேசனின் தலைவியும்சட்டத்தரணியுமான மர்யம் நளீமுடீனின் வழிகாட்டலில் இடம்பெற்றது.

சர்வதேச மகளிர் தினத்தினை முன்னிட்டு மாணவியை கௌரவிக்குமுகமாக முன்னாள் வர்த்தக வாணிபத்துறை அமைச்சர் மர்ஹும் ஏ.ஆர் மன்சூரின் புதல்வரும், கல்முனை மாநகர பிரதி முதல்வருமான ரஹ்மத் மன்சூர் மாணவியின் வீட்டுக்கு கடந்த வெள்ளிக்கிழமை (26) நேரடியாகவ் சென்று ஐம்பது ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் நினைவுச்சின்னம் என்பனவற்றை அன்பளிப்பாக வழங்கி வைத்தார்.

இம்மாணவி இந்தோனேஷியாவின் ஜாவா பல்கலைக்கழகத்தில் கடந்த வருடம் (2020) இடம்பெற்ற விஞ்ஞான ஆராய்ச்சிப் போட்டியில் சுமார் 25 நாடுகள் பங்கேற்புடன் சுமார் 400 மாணவர்கள் கலந்து கொண்ட போட்டியில் இம்மாணவி புவியியல் தொடர்பான போட்டியில் பங்குபற்றி முதலாமிடத்தைப் பெற்று சாதனை புரிந்து நாட்டுக்கும் பெருமை ஈட்டித்தந்தமை குறிப்பிடத்தக்கது .

மேலும், இவர் பாடசாலை பாடசாலை ரீதியாக இடம்பெற்ற தமிழ், ஆங்கில தின, மீலாதுந் நபி விழா உள்ளிட்ட அனைத்துப்போட்டி நிகழ்ச்சிகளிலும் பங்குபற்றி தேசிய மற்றும் மாகாண மட்டங்களில் முதலிடம் பெற்றுக்கொண்டார்

கடந்த 2019ஆம் ஆண்டு தேசிய மீலாத் விழாவை முன்னிட்டு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் அகில இலங்கை ரீதியாக நடாத்தப்பட்ட ஆங்கில மொழிமூல பேச்சுப்போட்டியில் தேசிய ரீதியில் முதலிடம் பெற்றுக்கொண்ட இவர்,
பல்துறை சாதனைகளுக்காக கல்லூரி சமூகத்தினரால் “விலைமதிப்பற்ற முத்து”எனும் பட்டம் மற்றும் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிட்டத்தக்கது.

மேலும், இம்மாணவியின் எதிர்கால கல்வி நடவடிக்கை தொடர்பில் கேட்டறிந்த கல்முனை மாநகர பிரதி முதல்வர் ரஹ்மத் மன்சூர் தனது வாழ்த்தினையும் தெரிவித்துக்கொண்டார்.

மேலும், சகல வகையிலும் ஒத்துழைப்பு வழங்கிய ஏ.ஆர்.மன்சூர் பவுண்டேஷன் அமைப்பின் நிர்வாகிகள் அனைவருக்கும் கல்முனை மாநகர சபை பிரதி மேயர் ரஹ்மத் மன்சூர் விஷேட நன்றியினையும் தெரிவித்துக் கொண்டார்.

கல்முனை பிராந்தியத்திலுள்ள மாணவர்களின் கல்வி வளர்ச்சியை மேம்படுத்த ஏ.ஆர்.மன்சூர் பவுண்டேசன் கல்விக்காக கரம் கொடுக்கும வேலைத்திட்டங்கள்
முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது .

administrator

Related Articles