இலங்கைக்கான கனேடிய தூதுவர் தான் கண்காணிக்கப்படுவாதாக சந்தேகம் வெளியிட்டுள்ளார்?

இலங்கைக்கான கனேடிய தூதுவர் தான் கண்காணிக்கப்படுவாதாக சந்தேகம் வெளியிட்டுள்ளார்?

தனது உத்தியோகபூர்வ இல்லத்திற்கு வருகை தரும் சிலரின் விவரங்கள் ஊடகங்களில் வெளிவந்ததை அடுத்து, தாம் முழுநேர கண்காணிப்புக்கு உட்படுத்தப்படுவதாக சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் டேவிட் மெக்கினன் தனது ட்விட்டர் பதிவொன்றில் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான கனடாவின் உயர் ஸ்தானிகர் டேவிட் மெக்கின்னன் கொழும்பு 07 இல் உள்ள தனது உத்தியோகபூர்வமான வீட்டுக்கு முன்பாக ஊடகங்கள் எவையும் இல்லாத சந்தர்ப்பத்தில் தமது தனிப்பட்ட சந்திப்புகள் தொடர்பில் எவ்வாறு ஊடகங்களில் தகவல்கள் வெளியாகின்றன என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

கனேடிய தூதுவரின் இல்லத்தில் கனேடிய உயர்ஸ்தானிகரை பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் சந்தித்தமை தொடர்பாக இரண்டு பத்திரிகைகள் அண்மையில் செய்தி வெளியிட்டிருந்தமை தொடர்பாக தனது கேள்வியை எழுப்பியுள்ளார்.

இதேபோன்று இலங்கைக்கான பிரிட்டிஷ் உயர் ஸ்தானிகர் சாரா ஹல்டன் மற்றும் தென் கொரிய தூதர் வூன்ஜின் ஜியோங்கை சந்தித்ததாக உள்ளூர் ஊடகங்களும் செய்தி வெளியிட்டிருந்தன.

பங்களாதேஷ் மற்றும் தென் கொரியா ஆகிய இரண்டு நாடுகளும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் அங்கத்துவம் வகிக்கும் நாடுகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் இந்த மாத இறுதியில் இலங்கை தொடர்பான தீர்மானத்தில் வாக்களிக்கும். கனடாவும் இங்கிலாந்தும் இலங்கை தொடர்பான “கோர் குழுவின்” ஒரு பகுதியாகும் இது தீர்மானத்திற்கு ஆதரவைக் கோருகிறது.

சமீபத்தில் ஐரோப்பிய ஒன்றியம் ஜெனீவாவில் இலங்கையில் இடம்பெற்றுவரும் தீவிரமான கண்காணிப்பு குறித்து கவலைகளை எழுப்பியிருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

administrator

Related Articles