இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான உறவை வலுப்படுத்திக்கொள்ள இரு நாட்டு பிரதமர்களும் இணக்கம் (படங்கள்)

இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான உறவை வலுப்படுத்திக்கொள்ள இரு நாட்டு பிரதமர்களும் இணக்கம் (படங்கள்)

இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் காணப்படும் சமய மற்றும் காலாசார உறவுகளை மேலும் சக்திமிக்கதாய் பேண விரும்புவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானிடம் தெரிவித்துள்ளார்..

இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜயமாக இன்று (23) மாலை இலங்கை வந்த பாகிஸ்தான் பிரதமருக்கும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவுக்கும் இடையிலான இரு தரப்பு பேச்சுவார்த்தை அலரி மாளிகையில் நடைபெற்றது.

இதன்போதே பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த பேச்சுவார்த்தையில், தமது அழைப்பை ஏற்று பிரதமர் இம்ரான் கான் இலங்கைக்கு வருகைதந்தமைக்கு இலங்கை பிரதமர் நன்றி தெரிவித்ததோடு, இலங்கையில் தமக்கு வழங்கப்பட்ட மரியாதைக்கு பாகிஸ்தான் பிரதமர் நன்றி தெரிவித்துள்ளார்.

அத்துடன் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு வழங்கிய தலைமைத்துவம் போன்று பாக்கிஸ்தானும் வழி நடத்தப்படுவதாகவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ இதன்போது தெரிவித்துள்ளார்.

administrator

Related Articles