இலங்கைக்கும், பாகிஸ்தானுக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்து

இலங்கைக்கும், பாகிஸ்தானுக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்து

இலங்கைக்கும், பாகிஸ்தானுக்கும் இடையில் ஐந்து புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.

சுற்றுலாத்துறை, முதலீட்டு ஊக்குவிப்பு, தகவல் தொழிநுட்பம், பல்கலைக்கழக உறவு மற்றும் கைத்தொழில்துறை ஆகியன சம்பந்தமான ஒப்பந்தங்களே கைச்சாத்திடப்பட்டுள்ளன.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவுடனான இரு தரப்பு சந்திப்பின் பின்னரே மேற்படி ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.

இதேவேளை நாளை (24) காலை பாகிஸ்தான் பிரதமர் ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவை சந்திக்கவுள்ளார்.

administrator

Related Articles