இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா புறக்கணித்தது ஏன்? பா.ஜ.க முக்கியஸ்தர் வானதி சீனிவாசன்

இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா புறக்கணித்தது ஏன்? பா.ஜ.க முக்கியஸ்தர் வானதி சீனிவாசன்

இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா புறக்கணித்தது அரசியல் நடவடிக்கை என்று அரசியல் ரீதியான நடவடிக்கை என்று பா.ஜ.கவின் தேசிய மகளிரணித் தலைவரும், கோவை தெற்கு தொகுதி வேட்பாளருமான வானதி ஸ்ரீனிவாசன் விளக்கம் அளித்துள்ளார்.

இலங்கையில் விடுதலை புலிகளுக்கும், அந்நாட்டு ராணுவத்துக்கும் இடையில் பல நாட்களாக நடந்த உள்நாட்டு போர் 2009ம் ஆண்டு நிறைவடைந்தது. இப்போரின் போது பல்லாயிரக்கணக்கான தமிழர்களை இலங்கை ராணுவம் கொன்று குவித்தது, மேலும் பெண்களை பாலியல் வன்புணர்வு செய்தது. பல ஆயிரம் பேர் மாயமாகினர். போர் விதிமுறைகளை மீறி இலங்கை அரசு அப்பட்டமான போர்க்குற்றம் புரிந்ததாக மனித உரிமை ஆர்வலர்கள் குற்றம்சாட்டி வந்தனர்.

இலங்கை உள்நாட்டு போரின் போது மனித உரிமைகள் மீறப்பட்டதாக கூறி அந்நாட்டின் மீதான சர்வதேச விசாரணை கோரும் தீர்மானம் ஒன்றை கடந்த பிப்ரவரி மாதம் இங்கிலாந்து கொண்டு வந்தது. இந்த தீர்மானம் 22 நாடுகளின் ஆதரவுடன் நிறைவேறியிருந்தாலும், இந்தியா இந்த தீர்மானத்துக்கு வாக்களிக்காமல் புறக்கணித்தது. இந்த தீர்மானத்துக்கு வாக்களிக்காமல் இந்தியா புறக்கணித்தது தமிழ்நாட்டில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தநிலையில், தமிழக தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த கோவை தெற்கு தொகுதி பா.ஜ.க வேட்பாளர் வானதி ஸ்ரீனிவாசன்

,‘இலங்கைத் தமிழ் மக்கள் நலனில் இந்தியா அதிகமான அக்கறையுடன் செயல்படுகிறது. இலங்கைத் தமிழ் மக்களின் உரிமை மற்றும் சம அந்தஸ்திற்காக இந்தியா தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. மோடி பிரதமராக பதவியேற்ற பின்னர் இலங்கைத் தமிழர்களின் வாழ்வுரிமை தொடர்பான விஷயங்களில் உறுதியான நிலைப்பாடு எடுத்துள்ளது

ஐநா சபையில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா புறக்கணித்து இருப்பது அரசியல் ரீதியான நடவடிக்கை. அண்டை நாடுகள் உறவை பேணும் வகையிலும், மக்களின் உரிமைகளை பாதுகாக்கும் வகையிலும் இந்நடவடிக்கை எடுத்துள்ளது. இலங்கைத் தமிழர்களின் நலனில், உரிமையில் இந்தியா சமரசம் செய்து கொள்ளாது.

administrator

Related Articles