இலங்கை தொடர்பான பிரேரணை நிறைவேற்றம்

இலங்கை தொடர்பான பிரேரணை நிறைவேற்றம்

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்பட்ட இலங்கைக்கு தொடர்பான பிரேரணை 11 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இலங்கை மீதான பிரேரணைக்கு ஆதரவாக 22 வாக்குகளும், எதிராக 11 வாக்குகளும் அளிக்கப்பட்டிருந்தன.

14 நாடுகளும் வாக்கெடுப்பில் கலந்துக்கொள்ளவில்லை.

இந்தியா வாக்களிப்பதிலிருந்து விலகியிருந்தது.

அதேபோன்று, பாகிஸ்தான், சீனா, கியூபா, ரஷ்யா, பிலிப்பைன்ஸ், உள்ளிட்ட 11 நாடுகளும் பிரேரணைக்கு எதிராக வாக்களித்திருந்தன.

டென்மார்க், ஜேர்மன், இத்தாலி, பிரேஸில், போலாந்து, பிரித்தானியா உள்ளிட்ட 22 நாடுகள் பிரேரணைக்கு ஆதரவு தெரிவித்திருந்தன.

administrator

Related Articles