இலங்கையணி மீது ஏற்பட்டுள்ள சந்தேகம்

இலங்கையணி மீது ஏற்பட்டுள்ள சந்தேகம்

தென்னாபிரிக்க அணியுடன் நாளை (03) இடம்பெறவுள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியின் சிரேஸ்ட வீரர்கள் ஐவர் விளையாடுவதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

முதல் டெஸ்டில் உபாதைக்குள்ளான தனஜ்ய டி சில்வாவுக்கு இரண்டு வார கால ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.

அதற்கும் மேலதிகமாக சுரங்க லக்மால், கசுன் ராஜித, லஹிரு குமார மற்றும் தினேஸ் சந்திமால் ஆகிய முன்னணி வீரர்களும் நாளைய போட்டியில் பங்கேற்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

எனினும் போட்டிக்கு முன்னரான உடற்கூற்று பரிசோதனையில் சந்திமால் மற்றும் சுரங்க லக்மால் ஆகியோர் தேர்வடையக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது.

எனினும் சுரங்க லக்மாலுக்கு நேற்று நடத்தகப்பட்ட உடற்கூற்று பரிசோதனையில் அவர் தேர்வடையவில்லை என அணி முகாமையாளர் அசந்த டி மெல் தெரிவித்துள்ளார்.

நாளைய (03) போட்டி ஜொஹனஸ்பேர்கில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடதக்கது.

administrator

Related Articles