இலங்கையின் தென் கிழக்கு வங்காள விரிகுடாவில் புதிய சூறாவளி

இலங்கையின் தென் கிழக்கு வங்காள விரிகுடாவில் புதிய சூறாவளி

இலங்கையின் தென் கிழக்கு வங்காள விரிகுடாவில் புதிய சூறாவளியொன்று உருவாகியுள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவிக்கின்றது.

இந்த புதிய சூறாவளிக்கு நிவர் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

நிவர் என்ற பெயர் ஈரான் நாட்டினால் பரிந்துரை செய்யப்பட்ட பெயர் என அறிய முடிகின்றது.

இதன்படி, எதிர்வரும் சில தினங்களில் இலங்கை மற்றும் தமிழகத்தின் பல பகுதிகளுக்கு கடும் காற்றுடனான வானிலை நிலவும் அதேவேளை, கடும் மழை பெய்யும் சாத்தியமும் காணப்படுவதாக சென்னை வானிலை மையம் குறிப்பிடுகின்றது.

வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் எதிர்வரும் சில தினங்களுக்கு கடும் மழையுடனான வானிலை நிலவும் என இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

குறித்த சூறாவளியானது, வடக்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து, தமிழ் நாட்டு – பாண்டிச்சேரி கரையோர பகுதியை அண்மிக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை: தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை யொட்டிய பகுதிகளுக்கும், தென்மேற்கு அரபிக் கடல் பகுதிகளுக்கும் வரும் 25 ஆம் தேதி வரை மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது

administrator

Related Articles