இலங்கையில் ஒரே நாளில் 9 கொரோனா மரணங்கள்!

இலங்கையில் ஒரே நாளில் 9 கொரோனா  மரணங்கள்!

இலங்கையில் கொரோனா மரணங்கள் தொடர்பான அறிக்கையிடல் ஆரம்பித்தது முதலாக ஒரேநாளில் அதிகமான கொரோனா தொற்றாளர்கள் பதிவுசெய்யப்பட்ட நாளாக இன்று சனிக்கிழமை அமைந்தது. இன்று மாத்திரம் 9 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இன்று சனிக்கிழமை அறிக்கையிடப்பட்ட மரணங்களோடு கொரோனா காரணமாக இலங்கையில் மரணித்தவர்களின் எண்ணிக்கை 83 ஆக அதிகரித்துள்ளது. 

வெள்ளைவத்தை ,பம்பலப்பிட்டிய, கொழும்பு கொச்சிக்கடை மருதானை என சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் பகுதிகளில் இருந்தும் மரணங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. 

இன்றைய தினம் சம்பவித்த மரணங்களில் நான்கு மரணங்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இடம்பெற்ற அதேவேளை இரண்டு மரணங்கள் அங்கொடை ஐடிஎச் வைத்தியசாலையிலும் 3 மரணங்கள் அவரவர் வீடுகளிலும் இடம்பெற்றுள்ளமை  சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கடந்த ஒக்டோபர் 4ம் திகதி மினுவங்கொடை ஆடைத்தொழிற்சாலை ஊழியருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது முதல் நாட்டில் அதிகரித்த இரண்டாம் கட்ட கொரோனா அலையில் இதுவரை 60ற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில் கடந்த சிலநாட்களாக மரணங்களில் எண்ணிக்கை தினந்தோறும் அதிகரிப்பைக் காண்பிக்கின்ற நிலையில் மரணங்கள் பற்றிய விபரங்களைத்தாங்கிவரும் அறிக்கையை இலங்கை அரசாங்கம் தாமித்து வெளியிடும் போக்கைக் காணமுடிகின்றது. நேற்றையதினம் மரணங்கள் பற்றிய அறிக்கை வெளியானபோது இரவு 11.45 ஆக இருந்தது. இன்று .இரவு 11மணிக்கே அறிக்கை வெளியானமை குறிப்பிடத்கத்கது. 

இதேவேளை நாட்டில் மேலும் 487 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இவ்வாறுஇ தொற்று கண்டறியப்பட்டவர்கள் அனைவரும் ஏற்கனவே தொற்று கண்டறியப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, மினுவாங்கொட மற்றும் பேலியகொட மீன் சந்தை கொரோனா கொத்தணியில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 16 ஆயிரத்து 252 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 19 ஆயிரத்து 771ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து இன்று மட்டும் 319 பேர் வீடுகளுக்குத் திரும்பியுள்ள நிலையில் இதுவரை 13 ஆயிரத்து 590பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்.

இந்நிலையில், இன்னும் ஆறாயிரத்து 107 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

இதனிடையே கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் தப்பிசென்ற பெண் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

குறித்த பெண் இரத்தினபுரி-எஹெலியகொட பகுதியில் வைத்து கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு ஐ.டி.எச். வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தபோது தனது இரண்டரை வயது மகனுடன் குறித்த பெண் நேற்று முன்தினம் இரவு தப்பியோடியிருந்தார்.

இந்நிலையில், பெண்ணைக் கண்டுபிடிக்க புலனாய்வுப் பிரிவினரின் உதவியுடன் விசாரணை மற்றும் தேடுதல் இடம்பெற்று வந்தநிலையில் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, குறித்த பெண் மகனுடன் பேருந்தில் தனது ஊருக்குச் சென்றுள்ளதுடன், அங்குள்ள உறவினர் ஒருவருர் வீட்டில் மகனை ஒப்படைத்து விட்டு அங்கிருந்து சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி குளோப் தமிழ் தமிழ்

administrator

Related Articles