இலங்கையில் ஜனாநாயகம் எங்கே போகிறது?

இலங்கையில் ஜனாநாயகம் எங்கே போகிறது?

வனிதா மாணிக்கம்
அரசியல் ஆய்வாளர்.

கொரோனா நோய் காரணமாக உலகம் முழுவதும் இதுவரை சுமார் 1. 2 மில்லியன் மக்கள் உயிரழந்துள்ளனர். அத்துடன் 46.9 மில்லியன் மக்கள் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

குறிப்பாக இலங்கையில் மட்டும் இதுவரை 21 பேர் வரை உயிரிழந்து இருக்கின்றனர். ஏனைய நாடுகளுடன் ஓப்பிடும் வேளையில் இந்த எண்ணிக்கை குறைவாக இருக்கலாம் .ஆனால் இந்த 21 பேரின் மரணத்திற்குள் பாரிய
அரசியல் இருப்பதை யாராலும் மறுக்க முடியாது. இதனை ஆராய்ய முன்னர்
2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி இடம்பெற்ற ஈஸ்டர் தாக்குதலை குறித்து கொஞ்சம் பார்ப்மோம்.

சஹாரான் எனும் தீவிரவாதியின் தலைமையிலான  தாக்குதல் காரணமாக கொழும்பு கொச்சிக்கடை மற்றும் நீர்கொழும்பில் சுமார் 280 பேர் வரை உயிரழந்தனர்.

இவர்களில் அதிகமானோர் சிங்கள இனத்தை சேர்ந்த  கத்தோலிக்க மதத்தினர்.  இந்த சம்பவம் இலங்கை மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது  மட்டுமன்றி அப்பாவி முஸ்லிம் மக்களை எதிரியாகவும் பார்க்க வைத்தது.

குண்டு வைத்தது எவனோ அகப்பட்டவன் எவனோ என்பதை போன்று அப்பாவி முஸ்லிம் மக்களை எதிரியாக சிங்கள மக்கள் பார்க்க தொடங்கினார்கள் . இதனை சாதகமாக பயன்படுத்திய தற்போதைய அரசு முஸ்லிம் அரசியல் தலைமைகளை தங்களுடன் கூட்டு சேர்க்காமல் தனியாக தேர்தலில் களமிறங்கி இனவாத ஆயுதத்தை கவனமாக கையாண்டு  ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை  ஸ்ரீலங்கா பொது ஜன பெரமுன கைப்பற்றியது.

அதன் பின்னர் அமைக்கப்பட்ட அமைச்சில் ஒரு முஸ்லிம் பிரதிநிதிக்கும் அமைச்சரவையில் அமர வாய்ப்பு வழங்கப்படவில்லை.
இது சிங்கள பேரினவாதிகளுக்கு  மகிழ்ச்சியை தந்தது. ஆனால் இந்த மகிழ்ச்சி முஸ்லிம் மக்களுக்கு கவலையே கொடுத்தது. ஏனெனில் கொடிய கொரோனாவினால் உயிரிழந்தவர்களில்  அதிகமானோர்  முஸ்லிம்கள் . இவர்களுடைய ஜனாஸாக்களை புதைக்க வாய்ப்பு வழங்கப்படவில்லை மாறாக ஏரிக்கவே அனுமதி வழங்கப்பட்டது. இது தங்களது மார்க்கத்தால் ஏற்று கொள்ளப்படவில்லை என முஸ்லிம் மதத்தலைவர்கள் கூறுகிறார்கள்.

சஹாரின் ஈஸ்டர் தாக்குதல் மற்றும் முஸ்லிம் தலைமைகள் மீது இருக்கும் அதிருப்தி காரணமாக பழி
வாங்கும் எண்ணத்தில் பல்வேறு காய் நகர்த்தல்களை பெரும்பான்மை பேரினவாதிகள் மேற்கொண்டனர்.

அதன் உச்சமே கொரோனா காரணமாக உயிரழந்தவர்களை புதைக்க கூடாது என்ற அறிவிப்பு. இதனை முஸ்லிம் தலைமைகள் மட்டுமல்ல பெரும்பான்மையான முஸ்லிம் மக்கள் ஏற்று கொள்ளவில்லை. ஆனால் இதற்கு ஆளுந்தரப்பு செவி சாய்க்கவில்லை. ஆனால்  உயிரழந்தவர்களின் முஸ்லிம் சமூகத்தை சேர்ந்தவர்களும் இருக்கிறார்கள்.

இவர்களின் ஜனஸாக்களை புதைக்க அரசாங்கம் அனுமதி வழஙுகவில்லை இப்படியே ஆரம்பம் முதல் எடுக்கப்பட்ட தீர்மானத்தால் முஸ்லிம் மக்கள் வேதனையடைந்ததே மிச்சம்.

இதுவரை 9 முஸ்லிம் சமூகத்தினர் கொவிட் காரணமாக உயிரழந்தனர். ஆனால் அவர்களுக்கு தங்களது மதரீதியாக இறுதி சடங்குகளை செய்ய கிடைக்கவில்லை.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் நியதி பிரகாரமாக கொரோனா காரணமாக உயிரழந்தவர்களை 8 அடிக்கு மேலே தோண்டி புதைக்க முடியும். ஆனால் கடந்த ஆறு மாத காலமாக எதுவுமே பேசாமல் இருந்த அரசாங்கம் 20 க்கு ஆதரவாக முஸ்லிம் பாரளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்த பின்னர் தற்போது முஸ்லிம் சமூகத்திற்கு ஆதரவாக செயற்பட போவதக அறிய முடிகிறது.

ஆதரவு தெரிவித்தால் மட்டுமா சட்ட திட்டங்களை மாற்ற அரசாங்கம் முனைகிறது.இது எந்த வகையில் நியாயம்? ஜனநாயகம் என்பது சகலருக்கும் சம உரிமை.என்பது ஐயமில்லை 20 க்கு ஆதரவு தெரிவித்த பின்னர் மட்டும் சட்டங்களை மாற்றுவது. பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது

இவ்வாறான செயல்கள் வேதனை என்பதை மறுக்க முடியாது. முஸ்லிம் சமூகம் மட்டுமல்ல சகல சமூகங்களுக்கும் சம உரிமை வழங்கப்படாவிடின் பல்வேறு சிக்கல்கள் உருவாகும் என்பதை யாராலும் மறுக்க முடியாது.

administrator

Related Articles