இலங்கை இந்திய சமுதாய பேரவையின் கலந்துரையாடல்!!

இலங்கை இந்திய சமுதாய பேரவையின் கலந்துரையாடல்!!

இலங்கை இந்திய சமுதாய பேரவையுடனான சந்திப்பொன்று இன்றைய தினம் இலங்கை இந்திய சமுதாய பேரவையின் தலைவர் ராஜு சிவராமன் மற்றும் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையிலும் அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இதன் போது பேரவையின் கடந்தகால மற்றும் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பாகவும் மலையக பகுதிகளிலே அதி கஷ்ட பிரதேச பாடசாலைகளுக்கு மலசலகூட வசதிகளை அமைத்து கொடுத்தல் மற்றும் உயர் கல்வியை தொடர்வதற்கு முடியாமல் இருக்கும் மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்குதல், இளைஞர் யுவதிகளுக்கான சுயத்தொழில் ஊக்குவிப்பு பயிற்சிகளை வழங்குதல் போன்ற பல்வேறு செயற்பாடுகளை எதிர்காலத்தில் எவ்வாறு முன்னெடுப்பது தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டது.

இக் கலந்துரையாடலில் பேரவையின் தலைவர், உபதலைவர் மற்றும் பேரவையின் அங்கத்தினர்கள் என அனைவரும் கலந்துக்கொண்டனர்.

administrator

Related Articles