இலங்கை குறித்த பிரேரணை மீதான வாக்கெடுப்பு இன்று

இலங்கை குறித்த பிரேரணை மீதான வாக்கெடுப்பு இன்று

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடரில் இலங்கை குறித்த பிரேரணை மீதான வாக்கெடுப்பு இன்று (23) இடம்பெறவுள்ளது.

இந்த பிரேரணை மீதான வாக்கெடுப்பு நேற்று இடம்பெற இருந்த நிலையில் பிரேரணை சமர்பிக்கப்பட்டத்தில் ஏற்பட்ட கால தாமதம் காரணமாக வாக்கெடுப்பு ஒத்தி வைக்கப்பட்டது.

இதற்கமைய ஜெனிவா நேரப்படி இன்று முற்பகல் 9 மணிக்கு பிரேரணை விவாதிக்கப்பட்டு வாக்கெடுப்புக்கு விடப்பட உள்ளது.

நல்லிணக்கம், பொறுப்புகூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல் ஆகிய விடயங்களை வலியுறுத்தி இந்த பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியா, ஜேர்மன், மலாவி, கனடா, மொண்டிநீக்ரோ மற்றும் வடக்கு மெசிடோனியா ஆகிய நாடுகள் கூட்டாக இந்த பிரேரணையை முன்வைத்துள்ளமை குறிப்பிடதக்கது.

administrator

Related Articles